Friday, January 15, 2016

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு

பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது

Thursday, January 14, 2016

பிளஸ் 2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதிலளிக்க ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஜன.18 முதல் 28 வரை (பாட வாரியாக) தொலைக்காட்சி வழியாக ஆசிரியர்கள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்

Monday, January 11, 2016

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகிஉள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது.

Saturday, January 9, 2016

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட அரசுப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை பயமின்றி எதிர்கொள்ள கல்வித்துறை சார்பில், உளவியல் ரீதியான ஆலோசனை பயிற்சிகள் துவங்கியுள்ளன.

சிறப்பு வகுப்புகளில் ஆர்வம் காட்டாத பிளஸ் 2 மாணவர்களால் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறையுமோ என தலைமை ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் பத்தாம் வகுப்புபிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை விட அதிகரிக்க வேண்டும் என கல்வித்துறை பள்ளிகளை வலியுறுத்தி வருகிறது.

Thursday, January 7, 2016

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது.