Thursday, October 26, 2017

Saturday, October 7, 2017

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Friday, September 1, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்

பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது.
அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்கு பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது.
எனவே, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, பிளஸ் 2 தேர்வு எழுதலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 26, 2017

பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.

பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்...

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Thursday, August 24, 2017

பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை

'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Sunday, July 30, 2017

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும்

 ”பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,” என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.