Thursday, December 31, 2015

மாணவர்கள் படிப்பை நேசிக்க வேண்டும்

திக்க வேண்டும் என்ற ஆர்வம்மாணவமாணவியருக்கு வரவேண்டும்படிப்பை நேசிக்க வேண்டும்எனதமிழக ஏ.டி.ஜி.பி.,சைலேந்திர பாபு பேசினார்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை மற்றும் ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய வெற்றி உறுதி என்றபிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிபெருமாநல்லூர் எம்.எல்.ஆர்.திருமண மண்டபத்தில்நேற்று நடைபெற்றது. 
தமிழக ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு பேசியதாவது:
மாணவர்கள்படிப்பில் ஆர்வம் காட்டினால்அவர்கள் நினைத்தபடிகலெக்டர்வக்கீல்டாக்டர்போலீஸ் அதிகாரி எனஎது வேண்டுமானாலும் ஆகலாம். மாணவர்களேபுத்தகத்தை ஆராய்ச்சி செய்து படியுங்கள். பிளஸ் 2 தேர்வு கடினமானதல்ல. நூறு நாட்களில்உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும். புரிந்து படிக்க வேண்டும். மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தால்நீங்களே கதாநாயகன். தேர்வைக்கண்டு பயப்படவோவருந்தவோ கூடாது. தீபாவளி பண்டிகை போல்,மகிழ்ச்சியாக நினைத்துநன்றாக படிக்க வேண்டும். உச்சாகமாகவும்சந்தோஷமாகஆராய்ச்சி செய்து படித்தால்நீங்களே வெற்றித்திருமகன்.
சாதிக்க வேண்டும் என்ற ஆசைஆர்வம்மாணவனுக்கு வர வேண்டும்சோர்வு இருக்கக்கூடாது. அப்போது மட்டுமே முன்னேற முடியும். என்ன படிக்க வேண்டும்எதை படிக்க வேண்டும் என,திட்டமிடல் வேண்டும். சினிமாகிரிக்கெட்டை போல்படிப்பையும் நேசிக்க வேண்டும். பாட்டுஒவியம்,விளையாட்டு போலவேபடிப்பும் ஒரு கலை. ஆர்வத்துடன் படித்தால்வெற்றி உறுதி. இவ்வாறு,சைலேந்திரபாபு பேசினார்.
நிகழ்ச்சியில்மாணவர்களிடம் கேள்வி கேட்டுபதில் அளித்தவர்களுக்கு புத்தகத்தைஅவர் பரிசாக வழங்கினார். திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி பிளஸ் மாணவ,மாணவியர் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலவலர் முருகன்தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அதிகாரி விஜயலட்சுமிஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ்பொருளாளர் கோவிந்தசாமிமுதல்வர் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment