Tuesday, June 7, 2016

தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்

தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும், 2017 மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள்ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிஅறிவியலில் தேர்ச்சி பெறாதவர்கள்புதிய பாடத்திட்டத்தில்அறிவியல் செய்முறை பயிற்சிக்கு இதுவரை பதிவு செய்யாத தனித்தேர்வர்கள்பொதுத்தேர்வுக்கு முன்செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும்இன்று முதல்ஜூன் 30ம் தேதி வரைமாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ.அலுவலகங்களில்தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்தங்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்கு சென்றுசெய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். இந்த வகுப்பில், 80 சதவீத நாட்கள் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமேமார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள்அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு,செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரங்களை அறிந்துசெய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment