Tuesday, April 26, 2016

4 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுற்றது.

மார்ச் 4 முதல் ஏப்.,1 வரை பிளஸ் 2 தேர்வு நடந்தது. இதில் மொழிப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14ம்பிரதான பாடங்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்.,5லும் துவங்கியது.இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளிகள்) உமா,முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கண்காணிப்பில் திருநகர் சீதாலட்சுமிகருமாத்துார் புனித கிளாரட்ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்களில் திருத்தும் பணிகள் நடந்தன. 2 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 
இதில்சீதாலட்சுமி பள்ளியில் 1.40 லட்சம்கிளாரட் பள்ளியில் 1.25 லட்சம்ஒத்தக்கடை பள்ளியில் 1.30லட்சம் உட்பட மொத்தம் 4 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. மாணவர்களுக்கான மதிப்பெண்கள் விவரம் குறிப்பிடப்பட்டு தேர்வுத்துறையின் டேட்டா மையத்திற்கு அனுப்பும் பணியில் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 
காத்திருந்த ஆசிரியர்கள்: 
உயிரியல் தேர்வில்உயிர்-தாவரவியல்உயிர்-விலங்கியல் என இரு பகுதிகள் உள்ளன. இவ்விடைத்தாளை திருத்தும்போதுஉயிர்-தாவரவியல் பகுதியை திருத்தும் வரை உயிர்-விலங்கியல் பகுதியை திருத்தும் ஆசிரியர்கள் காத்திருக்க நேர்ந்தது.
எனவேஅடுத்த ஆண்டில் இந்த தேர்வின் விடைத்தாள் ஒருங்கிணைந்ததாக இல்லாமல் இருக்க வேண்டும். இரு பகுதிகளும் தனித்தனியாக திருத்தும் வகையிலான விடைத்தாள் தயாரிக்கவும்,மாவட்ட பகுதியில் உள்ளது போல்நகர் மையத்திலும் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயணப்படி படி வழங்கவும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment