Tuesday, April 26, 2016

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புஇரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. பிளஸ் பொதுத் தேர்வுமார்ச், 4ல் துவங்கிஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணிஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம்பிளஸ் மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டுசென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. 
இன்னும்இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்துமாவட்ட வாரியாக முதலிடம்மாநில வாரியானரேங்க் எடுத்த மாணவ,மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். 
இந்த பணிகள்ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால்மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால்மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனஅரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment