Friday, February 17, 2017

‘பிரின்டிங்’ செய்த பிளஸ் 2 மாணவர்கள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், பிரின்டிங் மற்றும் டையிங் குறித்து, மாணவர்கள் செயல்முறை விளக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது.

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும், ‘டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி’ என்ற பாடப்பிரிவு உள்ளது. கடந்த, 1957ம் ஆண்டில் துவங்கப்பட்ட இப்பாடப்பிரிவில், ஆண்டுக்கு, 40 பேர் பயின்று வெளியேறுகின்றனர்.

நடப்பு ஆண்டு, ‘டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி பிரிவில், 38 மாணவர்கள் பிளவு 2 தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு, நேற்று நடந்தது. இதில், பிரின்டிங் மற்றும் டையிங் குறித்து செய்முறை தேர்வு நடைபெற்றது. 

பிரின்டிங் மற்றும் டையிங் செயல்பாட்டை, மாணவர்கள் செய்து காண்பித்தனர். இன்று, கைத்தறி மற்றும் விசைத்தறி செயல்பாடு குறித்து தேர்வு நடக்கிறது.

ஒரு செய்முறை தேர்வுக்கு, 200 மதிப்பெண்கள் வீதம், இரு தேர்வுக்கு,400 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. கடந்த, 9ம் தேதி துவங்கிய செய்முறை தேர்வின் முதல் கட்டம், நேற்று நிறைவு பெற்றது; அடுத்த கட்ட தேர்வு, வரும், 24ல் முடிகிறது. வரும், மார்ச், 2ம் தேதி, பொதுத்தேர்வு துவங்குகிறது

No comments:

Post a Comment