Wednesday, February 22, 2017

பிளஸ் 2 தேர்வு ஆயத்த பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வினை மொத்தம், 7,266 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஆயத்தப்பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சுயநிதி என, 71 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்தாண்டு மார்ச் 2 முதல் துவங்கி 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகிறது. கல்வி மாவட்டத்தில் மாணவர்கள், 3,121 பேரும், மாணவியர், 3,894 பேரும்; தனித்தேர்வர்கள் மாணவர்கள், 153 பேரும், மாணவியர், 98 பேரும் என மொத்தம், 7,266 பேர் தேர்வினை எழுதுகின்றனர்.

பணியாளர்கள் நியமனம், பறக்கும்படை அமைப்பு மற்றும் வகுப்பறையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

23 மையங்கள் கல்வி மாவட்டத்தில், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.வி.எம்., பி.கே.டி., கிணத்துக்கடவு பள்ளி, சமத்துார் ராம ஐயங்கார் மேல்நிலைப்பள்ளி, ஏ.நாகூர் மத்திய மேல்நிலைப்பள்ளி, வடசித்துார், நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி.

கோட்டூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி, திவான்சாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காளியாபுரம் பழனியம்மாள் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி பள்ளி, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கோமங்கலம் வித்யா நேத்ரா பள்ளி உள்ளிட்ட 23 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. 

தேர்வுகள் காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல், 10 நிமிடம் வினாத்தாள் வாசிக்கவும், ஐந்து நிமிடம் விடைத்தாள் தயார் செய்வதற்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றன. 

கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து வினாத்தாள்களும், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வினாத்தாள் கட்டு வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டை விட அதிகம் கல்வி மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வினை, 2,754 மாணவர்கள் பேரும், மாணவியர், 3,545 மற்றும் தனித்தேர்வர்களில் மாணவர்கள், 158, மாணவியர், 107 பேர் என மொத்தம், 6,564 பேர் தேர்வு எழுதினர்.

இந்தாண்டு 7,266 பேர் தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக, 702 பேர் பிளஸ்௨ தேர்வினை எழுதவுள்ளனர். கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில்,’ கல்வி மாவட்டத்தில், இத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன,’ என்றனர். கல்வி மாவட்டத்தில் எழுதுவோர் 7,266 பேர்

No comments:

Post a Comment