Monday, May 15, 2017

சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 ’ரிசல்ட்’ எப்போது?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் நடந்த, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 தேர்வு முடிவு, 24ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, 30ம் தேதியும் வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், தேர்வு முடிவு தேதியை, சி.பி.எஸ்.இ., இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதற்கிடையில், தேர்வு முடிவு வராவிட்டாலும், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் வந்த பின், அதன் அடிப்படையில், பாடப்பிரிவுகளை முடிவு செய்யலாம் என, கல்லுாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment