தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்த, உத்தர பிரதேச தனியார் பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கும்,சீல் வைக்கப்பட்டது.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ள, உத்தர பிரதேசத்தின் அலகாபாத் நகரில் உள்ளது, எம்.ஏ. கான்வென்ட் பள்ளி. சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி தேசிய கீதத்தை பாடுவதற்கான பயிற்சியை, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அளித்தனர்.
பள்ளி மேலாளர் தடை:
இதற்கு, பள்ளியின் மேலாளர் ஜியா உல் ஹக் தடை விதித்தார். கடவுள் மற்றும் மதத்தைவிட, நாடு மேலானது என்ற தேசிய கீதத்தின் வரிகள், இஸ்லாம் மதத்துக்கு எதிரானது. அதனால் தேசிய கீதத்தை பாடக் கூடாது என, அவர் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு எதிர்த்து, தலைமை ஆசிரியர், எட்டு ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகினர். இது தொடர்பான செய்தி வெளியானதும், பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பள்ளியை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மத ரீதியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக, ஜியா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் பள்ளி, அரசின் எவ்வித அனுமதியையும் பெறாமல், கடந்த, 20 ஆண்டுகளாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பள்ளிக்கு, &'சீல்&' வைக்கப்பட்டு உள்ளது.
பலத்த பாதுகாப்பு:
பள்ளியில், படித்து வந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பள்ளி அமைந்துள்ள பகுதியில், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment