Thursday, October 13, 2016

பிளஸ் 2 தேர்வு வினா எப்படி இருக்கும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல், குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில்ஆண்டுதோறும் வினாக்களின் வகைகள் மாற்றப்படுகின்றன. முன்னர்பொதுத்தேர்வில்பாட புத்தகத்தின் பின்பக்க வினாக்கள் மட்டுமே இடம்பெற்றன. 
கடந்த ஆண்டுபாடங்களின் உட்பகுதிகளில் இருந்தும்வினாக்கள் கேட்கப்பட்டன. இது குறித்துகல்வி ஆண்டின் துவக்கத்திலேயே,தேர்வுத் துறையால் சுற்றறிக்கை வெளியிட்டது. அதில்புத்தகம் முழுவதையும்மாணவர்கள் படிக்க வேண்டும்எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும்வினாக்கள் இடம் பெறும் என,தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த ஆண்டுஅது போன்ற சுற்றறிக்கை எதையும்தேர்வுத் துறை வெளியிடவில்லை. பெரும்பாலான பள்ளிகள்பாடங்களை நடத்துவதுடன்புத்தகத்தின் பின் பக்க கேள்வி களுக்கே முக்கியத்துவம் அளித்து,மாதிரி தேர்வுகளை நடத்துகின்றன.
அதனால்இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில்எந்த வகை வினாக்கள் இடம் பெறும்புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டுமா அல்லது பின் பக்க வினாக்கள்வினா வங்கியில் உள்ள வினாக்களுக்கான பதில்களை படித்தால் போதுமா எனமாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment