பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா விடை புத்தகங்கள், சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, வினா விடை மற்றும் ப்ளூ பிரின்ட் அடிப்படையில் தீர்வு என, பாடவாரியாக விற்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, சென்னையில் மட்டும் விற்கப்பட்ட நிலையில், தற்போது மாவட்டம் தோறும் வினியோகிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், சேலம் மாவட்ட மாணவ, மாணவியருக்காக,இப்புத்தகங்கள், மரவனேரியில் உள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மாணவர்கள், நேரடியாகவோ, தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ பெற்று கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் உள்ள, அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேவைப்படும் புத்தகத்துக்கான கட்டணத்தை வசூலித்து, அவற்றை பெற்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி கட்டணத்தில், இப்புத்தகங்கள் விற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment