கடந்த செப்டம்பரில் நடந்த பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகளின் விடைத்தாள்கள் நகலை சனிக்கிழமை (நவ.12) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 துணைத் தேர்வு:
பிளஸ் 2 துணைத் தேர்வு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் scan.tndge.in என்ற அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தேர்வெழுதிய மாணவ, மாணவிகள், தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல்:
மறுகூட்டல்:
இதேபோல், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதே முகவரியில் Application for retotalling, Revalution என்ற தலைப்பை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இப்படிவங்களைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து, வரும் 14, 15 ஆகிய நாள்களில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தையும் அதே அலுவலகங்களில் பணமாக செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment