Wednesday, December 7, 2016

பிளஸ் 2 - எஸ்.எஸ்.எல்.சி., பொதுதேர்வு மையங்கள் முடிவு

ஈரோடு மாவட்டத்தில்நடப்பாண்டு பொது தேர்வுக்கான தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

வரும், 2017 மார்ச்ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வு நடக்கவுள்ளது. இதற்கான பணிகளில்கல்வித் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. 
தற்போது தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்கடந்தாண்டை விட பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.,யில் தலா இரண்டு தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 203 பள்ளிகளை சேர்ந்த, 12 ஆயிரத்து, 834 மாணவர்கள், 14 ஆயிரத்து, 86 மாணவிகள் என, 26 ஆயிரத்து, 920 பேர்பிளஸ் தேர்வு எழுதுகின்றனர். 
இவர்களுக்காக, 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை, 351 பள்ளிகளை சேர்ந்த, 13 ஆயிரத்து, 639 மாணவர்கள், 13 ஆயிரத்து, 293 மாணவிகள் என, 26 ஆயிரத்து, 932 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக, 99 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இத்தேர்வு மையங்கள் இறுதியானது. மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவோகுறைக்க முடியாது. மாறாக தேர்வு எழுதும் மாணவமாணவிகள் எண்ணிக்கை குறையலாம். அதே சமயம் தனி தேர்வர்களால் மையங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment