Wednesday, December 21, 2016

மாணவர் பட்டியல்; பிழைகளை திருத்த கடைசி வாய்ப்பு!

மார்ச் மாதத்தில்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள உள்ளமாணவர்களின் பெயர் விபரங்களை சரிபார்த்துபிழைகளை திருத்திக்கொள்ளதலைமை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
.
தமிழகத்தில்மார்ச் மாதத்தில் பிளஸ் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகளுக்கான மாணவர்களின் பெயர் பட்டியல்களைநேரடியாக அந்தந்த பள்ளிகளேஆன்லைன் முறையில்தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 
ஏற்கனவே பிழைகள் இல்லாமல் சரிபார்க்க அறிவுறுத்திஅதன் பின்விபரங்களை பதிவேற்றும் செய்யும் பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில்பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விபரங்களில்ஏதேனும் பிழைகள் இருப்பின்சரி செய்து கொள்ள கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இதில்மாணவர் பெயர் பட்டியலை திருத்த வேண்டிய பிழைகளைதலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் கூடிய பட்டியலாக தயார் செய்துஇன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
பிழைகள் ஏதும் இல்லாத பள்ளி தலைமை ஆசிரியர்கள்பட்டியலில் பிழைகள் ஏதும் இல்லை என,சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் மாணவர்களின் பெயர்களில் எவ்வித பிழைகளும் இல்லை எனவும்அப்படியிருப்பின் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறோம் எனவும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்புதல் கடிதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment