தமிழகத்தில், செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில், பிளஸ் 2துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் மற்றும் ஏற்கனவே பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறியவர்கள் விண்ணப்பித்து, கலந்து கொள்ளலாம். நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு, வரும், 26ம் தேதி முதல் அக்., 7 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், கலந்து கொள்ள விண்ணப்பித்த மாணவர்கள், தேர்வுத்துறை இணையதளத்தில், தங்களது விவரங்களை பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், சங்ககிரி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, இரு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் தேர்வெழுத உள்ளனர்
No comments:
Post a Comment