Friday, September 30, 2016

பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!

பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில்மாற்றம் செய்யப்பட்ட நிலையில்சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது
.
பிளஸ் பாட புத்தகம்அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்யதமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏஅளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. 
பழைய புத்தகத்தில் இருந்த வரிகள்அளவு மாற்றி அச்சிடப்பட்ட புத்தகத்தில் மாறாமல் வந்துள்ளதா?அல்லது மாற்றம் உள்ளதாஎன்பது குறித்த ஆய்வுஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. ஈரோட்டில் கணக்குப்பதிவியல்வணிகவியல்உயிரி-வேதியியல்ஆங்கில பாட புத்தகங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. ஒரு பாட பிரிவுக்கு மூன்று குழு வீதம்பாட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 
ஒரு குழுவில் அரசுமெட்ரிக்.பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி,சென்னையிலும் நடக்கும் இந்தப் பணிஅக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்றுகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment