Tuesday, September 27, 2016

கல்வி உதவித்தொகை; விண்ணப்பிக்க காலக்கெடு

தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர்அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என,தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்துவாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்குதொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குகல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 1 முதல்முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்குபுத்தகங்கள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல்மருத்துவம்சட்டம்விவசாயம்ஆசிரியர் பட்ட படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில்மாவட்ட அளவில் முதல், 10இடங்களை பெற்ற மாணவர்களுக்குஅவர்கள் மேல்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களைசெயலர்தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்த.பெ.எண்.718,தேனாம்பேட்டைசென்னை என்ற முகவரியில்அக்., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 2432 1542 என்ற எண்ணிலும்www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment