Thursday, March 31, 2016

பிளஸ் 2 தேர்வு நிறைவு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு,  நிறைவடைகிறது; மே முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 186 பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 240மாணவர்கள்; 12 ஆயிரத்து, 502 மாணவியர் என, 22 ஆயிரத்து, 742 பேர்தேர்வெழுதி வருகின்றனர்இவர்கள் தவிர, 836 தனித்தேர்வர்களும்தேர்வெழுதுகின்றனர்.
மொழித்தாள் தேர்வுகள் எளிதாக அமைந்திருந்தன. கணக்குப்பதிவியல் பாடமும் கை கொடுத்தது. இதற்கு மாறாககணிதம்வேதியியல் தேர்வுகள் கடினமாக இருந்தன. வணிகவியல்புவியியல்வீட்டுப்பாடம் தேர்வுகள் சுலபமாக அமைந்தன. 
ஐந்து மதிப்பெண் வினா கடினமாக இருந்ததாகவிலங்கியல் தேர்வு எழுதிய மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். வரலாறுதாவரவியல் தேர்வு வினாத்தாளும்மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்தது. இயற்பியல் மற்றும் பொருளாதாரம் தேர்வுநாளை (ஏப்., 1) நடக்கிறது. அத்துடன்பிளஸ் 2 தேர்வு நிறைவடைகிறது.
ரிசல்ட் எப்போது?
விடைத்தாள் திருத்துவதற்குதிருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிதாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொழித்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்கியது. மற்ற தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்துவது, 18ல் துவங்கிநடைபெற்று வருகிறது. 
ஏப்.இரண்டாவது வாரத்துக்கு முன்அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிக்கப்படும். மதிப்பெண் ஒருங்கிணைப்புகம்ப்யூட்டர் வழி சரிபார்ப்பு பணிகளுக்கு பின்மே முதல் வாரத்தில்தேர்வு முடிவு வெளியாகலாம் எனகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment