Friday, March 18, 2016

ஹைடெக் காப்பி; மாணவர்கள் சிக்கினர்

தெலுங்கானா மாநிலம்ஐதராபாத்தில்பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அஜிஸ் என்ற மாணவன்காப்பி அடிப்பதற்குநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளான்.

மொபைல் போன்மைக்ரோ சிப்புளுடூத் ஆகியவற்றை உடலில் பொருத்திமறைத்தபடிதேர்வு அறைக்கு சென்றுள்ளான். ஸ்விட்ச் ஆன் செய்த மொபைல் போனில்புளுடூத் வாயிலாக கேள்விகளை படிக்க;வெளியே இருந்த கல்லுாரி மாணவனான அவனது நண்பன் சமயதுல்லாபோனில் விடைகளை வாசித்துள்ளனர்.
அதை கேட்டு மாணவன் அஜிஸ்தேர்வு எழுதியுள்ளான். இதே முறையில் இரண்டு நாட்கள் தேர்வு எழுதிய நிலையில் மூன்றாவது நாள்கண்காணிப்பாளரிடம் அஜிஸ் சிக்கினான்.
அஜிசும்அவனுக்கு உதவிய சமயதுல்லாவும் கைதாகினர். அஜிஸ்மொபைல் போன் பழுதுநீக்கும் கடையில் சில நாட்கள் வேலை செய்து வந்ததாகவும்அப்போது இந்த தொழில்நுட்பத்தை கற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

No comments:

Post a Comment