Tuesday, March 15, 2016

தேர்வுத்துறை அதிர்ச்சி; வேதியியல் தேர்வில் வினாத்தாள் லீக்?

பிளஸ் 2 வேதியியல் தேர்வில்திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ளசில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள்லீக் ஆகியுள்ளது. 

இதனால்வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா எனமாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில்நேற்று கணித,அறிவியல் பிரிவுக்கு வேதியியல் பாட தேர்வும்பொருளியல் பிரிவு மாணவர்களுக்குகணிதப் பதிவியல் தேர்வும் நடந்தது. இதில்,வேதியியல் பாட தேர்வில்திருவள்ளூர் மாவட்டத்தில்வினாத்தாள், &'லீக்&' ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாகதிருவள்ளூர் மாவட்டத்தில்சென்னையை ஒட்டி உள்ள முகப்பேர்அம்பத்துார்,திருவொற்றியூர்திருமழிசைபொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில்சில தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டும்வினாக்களின் பட்டியல்நேற்று முன்தினம் மாலையில் கிடைத்துள்ளது.
இந்த பகுதி மாணவர்கள்வேறு மாவட்டங்களில் உள்ள தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கும் வினாக்களைநேற்று முன்தினம் இரவில் பகிர்ந்துவிடைகளை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாகபல ஆசிரியர்களிடம் நேற்று முன்தினம்விடைகளை கேட்டுள்ளனர். நேற்று தேர்வு துவங்கிய பின் தான்மாணவர்களும்சில பெற்றோரும் பகிர்ந்து கொண்ட வினாக்கள் அனைத்தும்,நேற்றைய வினாத்தாளில் இருந்தது தெரியவந்தது. சில பள்ளிகள்மாணவர்களிடம் வினாத்தாளின் முக்கிய அம்சங்களை மட்டும்நகல் எடுத்து கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர்கள்தேர்வுத்துறைகல்வித்துறை அதிகாரிகளுக்கும்சமூக ஆர்வலர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். இந்த புகாரால் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வினாத்தாள் எப்படிலீக் ஆனதுயாரால்எந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது என,கல்வித்துறை அதிகாரிகளும்போலீசும் இணைந்து விசாரணை நடத்துகின்றனர். இந்தப் புகாரால்,வேதியியல் தேர்வு மீண்டும் மறு தேர்வாக நடத்தப்படுமா எனமாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்கதேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியை தொடர்பு கொண்ட போது,நாங்கள் மிகவும் பாதுகாப்பாகவேவினாத்தாள்களை அனுப்புகிறோம்லீக் ஆவதற்கான வாய்ப்பே இல்லை,என்றார்.
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சீதாலட்சுமிடம் கேட்ட போதுஎனக்கு புகார் எதுவும் வரவில்லை,என்றார். இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டத்தில்முறைகேடு புகாரில், 16தனித்தேர்வர்கள்ஒரு பள்ளி மாணவர் பிடிபட்டனர்.

No comments:

Post a Comment