Thursday, March 16, 2017

கணக்கு பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண் வினாவில் குழப்பம்!

பிளஸ் 2 கணக்குபதிவியல் தேர்வில், நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண் வினா ஒன்றுக்கு இருவேறு விடைகள் கிடைப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ’சென்டம்’ பெறும் வாய்ப்பு நழுவியுள்ளது.
அறிவியல் பிரிவில் கணிதம் தேர்வில் ’சென்டம்’ பெற முயற்சிப்பது போல், கலைப் பிரிவு மாணவர்கள் கணக்கு பதிவியல் தேர்வில் ’சென்டம்’ பெற முயற்சிப்பர்.

இந்நிலையில் நெடு வினா பகுதியின் 12 மதிப்பெண்ணிற்கான 50வது வினா, நான்காம் பாடம் ’விகிதத்தில்’ இருந்து ’பின்வரும் விபரங்களை கொண்டு அ. மொத்த லாப விகிதம், ஆ. நிகர லாப விபரம், இ. இயக்க லாப விகிதம் ஆகியவற்றை கணக்கிடுக’ என்ற வினா கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு ’இயக்க லாப விகிதம்’ அடிப்படையில் இரண்டு விதிகள் அடிப்படையில் விடை காணலாம். இதன்படி பார்த்தால் ஒரே மாதிரி விடைகள் கிடைக்க வேண்டும். 

ஆனால், இரண்டு விதிகளின்படி இருவேறு விடைகள் கிடைக்கும் வகையில் அந்த வினா அமைந்துள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதனால் முழு மதிப்பெண் கிடைக்குமா என அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கணக்கு பதிவியல் ஆசிரியர்கள் கூறியதாவது:

இவ்வினாவிற்கு 2 விதிகள்படி விடையளிக்கலாம். அதாவது, ’நிகர லாபம் பிளஸ் இயக்க சார்பற்ற செலவுகள்’ என துவங்கும் விதிப்படி ’16.4 சதவீதம்’ எனவும், ’மொத்த லாபம் மைனஸ் இயக்க செலவுகள்’ என்ற இரண்டாவது விதிப்படி ’23 சதவீதம்’ எனவும் இருவேறு விடைகள் கிடைக்கின்றன. இது தவறு. 

இரண்டு விதிப்படியும் ஒரே விடை கிடைத்தால் தான் அது சரியான வினா. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் விவாதித்து இக்கேள்வி எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment