Friday, March 3, 2017

தமிழக சிறைகளில் 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

தமிழக சிறை கைதிகளும், சென்னை மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளில், 98 பேர், இன்று துவங்கும் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில், அதற்கான சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புழல் மத்திய தண்டனை சிறை கைதிகள் - 20 பேர், விசாரணை கைதிகள் - நான்கு பேர், திருச்சி சிறை கைதிகள் - 15 பேர், கோவை சிறை - 13 பேர், மதுரை சிறை - 11 பேர், பாளையங்கோட்டை சிறை - 10 பேர், சேலம் சிறை - ஒன்பது பேர், வேலுார் சிறை - எட்டு பேர், புதுக்கோட்டை சிறை - ஐந்து பேர், கடலுார் சிறை - மூன்று பேர் என, மொத்தம், 98 கைதிகள், புழல் சிறை மையத்தில் தேர்வு எழுத உள்ளனர்.பிற மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று மாலை, புழல் மத்திய சிறைக்கு வந்தனர். கைதிகள் தேர்வு எழுதுவதற்கான கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை, கல்வி மற்றும் சிறைத்துறை நிர்வாகம் செய்துள்ளது. கடந்தாண்டு, மொத்தம், 102 கைதிகள், பிளஸ் 2 தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment