Thursday, March 23, 2017

இயற்பியல், பொருளியல் தேர்வுகள் எப்படி இருந்தன?

பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இயற்பியல், பொருளியல் தேர்வு எழுதிய, பிளஸ் 2 மாணவ, மாணவியரிடம், தேர்வு எப்படி இருந்தது என, கேட்டோம். 

இதோ, அவர்களின் பதில்:

இயற்பியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர்த்து பிற வினாக்கள் எளிமையாக இருந்தன. இதனால், தேர்வு நேரம் முடிவதற்கு முன்னதாகவே அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதி முடித்தேன். எஸ்.மைக்கேல், பிளஸ்சிங் மெட்ரிக்குலேஷன் பள்ளி, கீரப்பாக்கம்

இயற்பியல் பாடத்தேர்வில் ஆசிரியர் நடத்திய வினாக்களே பெரும்பாலானாவை கேட்கப்பட்டிருந்தன. அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்ததால், தேர்வு நல்ல முறையில் எழுதியுள்ளேன். என். இந்திரா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு 

இயற்பியல் தேர்வில், எதிர்பார்த்ததை விட மிக, மிக, எளிதாக வினாக்கள் இருந்தன. நிச்சயம் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுப்பேன் என, எதிர்பார்க்கிறேன். ம.நீலமேகம், அரசு மேல்நிலைப் பள்ளி, மொறப்பாக்கம்

இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. இருப்பினும், அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்துள்ளேன். அதிக மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கே. ஜெயந்தி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத்

இயற்பியல் தேர்வு எழுதினேன். 3 மதிப்பெண் மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. மற்ற வினாக்கள் எளிமையாக இருந்தன. இருப்பினும், நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன். செ. கன்னித்தமிழ், அரசு மேல்நிலைப்பள்ளி, பொலம்பாக்கம்

இயற்பியல் தேர்வில், 10 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. 3 மதிப்பெண் வினாக்களில் கூடுதலாக ஒரு வினாக்கள் கேட்கப்பட்டிருந்து. வினா எண், 54 கடினமாக இருந்தது. என்.மொகமது இசாத்,வி.எஸ்.மெட்ரிக்குலேஷன் பள்ளி, திருக்கழுக்குன்றம்

இயற்பியலில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தன. 180 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.எம்.ஜென்னத், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுக்குன்றம்

பொருளியல் தேர்வில், பெரும்பாலான வினாக்கள் பள்ளி அளவில், கேட்கப்பட்ட வினாக்களாகவே இருந்தன. பெருவினாக்கள் பதில் எழுத போதுமான நேரம் போதவில்லை.ஆர். விநாயகமூர்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி, தென்னேரி

இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. குறிப்பாக, 54வது வினா, கடினமாகவும், குழப்பமாகவும் இருந்தது. இருப்பினும் நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன். ஆர்.ஆர்த்தி,எம்.சி.ஏ., மேல்நிலைப் பள்ளி, பழைய சீவரம்

பொருளியல் தேர்வில், அனைத்து வினாக்களுமே எளிமையாக இருந்தது. இதனால், அனைத்து வினாக்களும், நல்ல முறையில் விடை அளித்துள்ளேன். முழு மதிப்பெண் பெறுவேன். அ. அஜீத், டாக்டர் அருளப்பா மேல்நிலைப்பள்ளி, நீர்பெயர்

இயற்பியல் தேர்வில், யூவிலேசர் வினா மிகவும் கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் சில கடினமாகவே இருந்தன. மற்றபடி அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியிருக்கிறேன். கே.அபர்ணா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம்

வகுப்பில் ஆசிரியர்கள் அளித்த குறிப்பின் படி தேர்வுக்கு தயாரானதால், இன்றைய பொருளியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் வந்திருந்தன. இத்தேர்வில், 190 மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். ஜி.மானஸா, தனியார் பள்ளி, புதுப்பாக்கம்

இயற்பியல் தேர்வில், 3 மதிப்பெண் வினாக்கள் கஷ்டமாக இருந்தன. வேறு கேள்விகள், எளிதாகத் தான் இருந்தன. இருப்பினும், நல்ல முறையில் பதில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டி.கார்த்தி, அரசு மேல்நிலைப்பள்ளி, மாமல்லபுரம் 

இயற்பியலில், 5 மதிப்பெண் மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் மட்டுமே எளிதாக இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள், சற்று கடினமாக இருந்தது. விடை தெரிந்த எல்லா வினாக்களுக்கும் நல்ல முறையில் விடை அளித்துள்ளேன். ஜெ.தாட்சாயிணி, அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி, மணமை

எதிர்பார்த்த கேள்விகள் வந்ததால், இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும், மகிழ்ச்சியுடன் பதில் எழுதியுள்ளேன். நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவேன். - பொன்மணி, அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுடிவாக்கம்

எனக்கு விருப்பமான பாடம் பொருளியல் என்பதால், தனிக்கவனம் செலுத்தி படித்து வந்தேன். வினாக்கள் எளிமையாக இருந்தன. இதனால், மற்ற பாடத்தை விட இப்பாடத்தில், அதிக மதிப்பெண் பெறுவேன். எம்.கமலி, அரசு மேல்நிலைப்பள்ளி, சாலவாக்கம்

இயற்பியல் பாடத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. முன்னதாக நடந்த தேர்வில், கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றதால், பதில் எழுதுவதில் சிரமம் இருந்தது. மோ.அபினேஷ், அரசு மேல்நிலைப் பள்ளி, சாலவாக்கம்

No comments:

Post a Comment