தமிழக சட்டசபை தேர்தலுக்கு மறுநாள், மே, 17ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளும்; மே, 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை, நேற்று அரசு அறிவித்தது.
அதன் விவரம்:
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 17 காலை, 10:31 மணி முதல், 11:00மணிக்குள் வெளியிடப்படும்.
- பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 25 காலை, 9:31 மணி முதல், 10:00 மணிக்குள் வெளியிடப்படும்.
- மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை,மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in; www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment