Wednesday, May 11, 2016

பிளஸ் 2 தேர்வில் 81.73 சதவிகிதம் தேர்ச்சி

இடுக்கி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 81.73 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கேரளாவில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இடுக்கி
மாவட்டத்தில் 78 பள்ளிகளைச் சேர்ந்த 10,709 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதில் 8,752 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 81.73 ஆகும்.353 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் நுாறு சதவிகித மதிப்பெண்ணான &'ஏ- பிளஸ்&' கிரேடு பெற்றனர்.
அட்டப்பள்ளம் புனித தாமஸ் மேல் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 50 பேரும்மூணாறு அரசு மாதிரி உண்டு,உறைவிட மேல் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 31 பேரும் தேர்ச்சி பெற்றுஇரண்டு பள்ளிகளும் நுாறு சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளன.
குறைவு
மாவட்டத்தில் கடந்தாண்டைக்காட்டிலும்தற்போது தேர்ச்சி சதவிகிதம் 2.81 குறைவாகும். கடந்தாண்டு432 பேர் அனைத்து பாடங்களிலும் நுாறு சதவிகிதம் மதிப்பெண் பெற்ற நிலையில்இந்தாண்டு 353 பேர் மட்டுமே பெற்றனர். இதேபோல் கடந்தாண்டு பள்ளிகள் நுாறு சதவிகதம் தேர்ச்சி பெற்ற நிலையில்,தற்போது அதன் எண்ணிக்கை பள்ளிகளாக குறைந்தது.

No comments:

Post a Comment