Friday, May 20, 2016

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

 தனியார் மெட்ரிக் பள்ளிகளில்இலவச மாணவர் சேர்க்கைக்குமே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்என,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் படிஅனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில்வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்குஎல்.கே.ஜி.,வகுப்பில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறதுஇந்த பிரிவில்மாணவர் சேர்க்கைக்கு நன்கொடையோகல்விக் கட்டணமோ கிடையாதுகல்விக் கட்டணத்தைதமிழக அரசே அந்த பள்ளிகளுக்கு வழங்கும்.
இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்குமே, 18 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால்இது குறித்துபெரும்பாலான பெற்றோருக்கு தெரியவில்லை.
இதையடுத்துவிண்ணப்பங்கள் வழங்கும் தேதியை நீட்டித்துதமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படிமே, 30 வரை பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்மே, 31 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment