Saturday, May 7, 2016

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

 பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 

தமிழகத்தில்பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்சட்டசபை தேர்தலுக்கு பின்மே, 17ம் தேதி வெளியாகும் எனஅரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருந்தும்தாமதமாக வெளியிடஅரசு எடுத்துள்ள முடிவுஆசிரியர்களையும்பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 
பொதுவாகமே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால்அதன் தொடர்ச்சியான பணிகள்ஒரு வாரம் வரை பள்ளிகளில் நீடிக்கும். அவற்றை முடித்துவிட்டுகோடை விடுமுறையில்குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவது ஆசிரியர்கள் வழக்கம். 
இந்த முறை மே, 16ம் தேதி வரை தேர்தல் பணிகள், 17ம் தேதிக்கு பின் பிளஸ் தேர்வு முடிவு,அதன்பின், 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுஅதன் தொடர்ச்சியான பணிகள் என பார்த்து முடிப்பதற்குள்அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கிவிடும். 
மதிப்பீடு அனைத்தும் முடிவடைந்துதயார் நிலையில் இருந்தும்தேர்வு முடிவு வெளியிட தாமதிப்பது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவேஇன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில்தேர்வு முடிவு வெளியீடு தாமதம்பெற்றோரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment