Tuesday, February 9, 2016

விடைத்தாளில் முகப்பு தாள்;வரும் 11ல் பணிகள் துவங்கும்

விடைத்தாளில், முகப்பு தாள் இணைக்கும் பணியை, வரும், 11ம் தேதி துவங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கானபிளஸ் 2 பொதுத்தேர்வுமார்ச் 4ல் துவங்கி,ஏப்., 1 வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில்தனித்தேர்வர் உட்பட மொத்தம், 22 ஆயிரத்து, 742 பேர் தேர்வெழுத உள்ளனர்; 64 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
பொதுத்தேர்வு எழுதுவோரின்புகைப்படத்துடன் கூடிய முகப்பு தாள்,ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்படுகிறது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவிமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்கல்வி மாவட்டத்தில் அமைத்துள்ள தேர்வு மையங்களுக்குமுகப்பு தாள் கட்டு அனுப்பும் பணி நடந்து வருகிறது. 
முதன்மை கல்வி அலுவலர்கள்சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களிடம்வரும் 8ம் தேதி முதல், 11ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 11ம் தேதி முதல்முதன்மை விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணியில்தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்

No comments:

Post a Comment