Saturday, February 27, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் வந்தாச்சு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20, ஆயிரத்து, 498 மாணவர்களும், 23 ஆயிரத்து, 784 மாணவியரும்பிளஸ் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 

இதற்கான வினாத்தாள்கள் வந்திறங்கியுள்ளன. தேர்வு துவங்கஒரு வாரமே உள்ள நிலையில்அதற்கான தயார் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.பணிகள் தீவிரம்தமிழகம் முழுவதும்மார்ச் 4ம் தேதிபிளஸ்2 பொதுத்தேர்வு துவங்குகிறது. தேர்வு பணிகளில்அரசு தேர்வுத்துறையும்மாவட்ட கல்வி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவேவிடைத்தாளுடன்மாணவர்களின் விவரம் அடங்கியடாப் ஷீட் தைக்கும் பணிஅந்தந்த கல்வி மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில்சென்னைதேர்வுத்துறையிடமிருந்துமாவட்டங்களில் உள்ள வினாத்தாள் மையங்களுக்குவினாத்தாள்கள் அனுப்பப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எனஇரு கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து, 19 வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டுஅவற்றில் பாதுகாப்பாக வினாத்தாள்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்பு:வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பிற்காக, 24 மணி நேரமும்துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில்,நடப்பாண்டில், 20 ஆயிரத்து, 498 மாணவர்களும், 23 ஆயிரத்து, 784மாணவியரும் தேர்வெழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் 110 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நாளில்வினாத்தாள் மையங்களில் இருந்துதேர்வு மையங்களுக்கு, 23 வழித்தடங்களில்,வினாத்தாள்களை கார்களில் கொண்டு செல்லமாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் திட்டமிட்டுள்ளதுஅந்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்துவக்கத்தில் இருந்து பாடங்களை படிப்பதற்கு பதில்முக்கிய வினாக்கள்பள்ளியில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வின் வினாக்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம்
முந்தைய ஒன்றிரண்டு ஆண்டுகளின் பொதுத் தேர்வின் போது கேட்கப்பட்ட வினாத்தாள்களை சேகரித்துவைத்திருப்பீர்கள்அதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடிகிறதா எனசுயபரிசோதனை தேர்வு வைத்து படிக்கலாம். 
சந்தேகம் இருக்கும் பாடங்கள் மற்றும் கடினமான பாடங்களுக்குஆசிரியர்கள்சக மாணவர்களிடம் பதில் கேட்டுதெளிவு பெற்றுக் கொள்ளலாம்இதற்குஇந்த ஒரு வார காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீண் விவகாரங்கள்படிப்புக்கு சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடாமல்படிப்புக்கும்தேர்வுக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்க வேண்டும். வெற்றி உங்களுக்கேதேர்வுக்கு தயாராகுங்கள்!

No comments:

Post a Comment