Friday, February 26, 2016

பிளஸ் 2 தேர்வு; 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது!

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளைசுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில்மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • காலணிக்கு தடை, பிளஸ் 2 தேர்வு அறைக்குள்மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாதுதேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்
  • தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது
  • பிட் அடித்தல்காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகேதேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்
  • தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. 
இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment