Sunday, February 14, 2016

தேர்வு விடைத்தாளுடன் ’டாப் சீட்’ இணைக்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாளுடன்டாப் சீட் இணைக்கும் பணிகள்உடுமலை அரசுப்பள்ளிகளில் துவங்கின.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் விடைத்தாளின் முதல் பக்கத்தில்மாணவர்களின் விவரம்தேர்வு பாடம்பதிவு எண் என அனைத்து விவரங்களையும் மாணவர்களாகவே எழுத வேண்டியிருந்தது.
இதனால்விடைத்தாள்கள்களை மாற்றுவதுமற்றும் பதற்றத்தில் மாணவர்கள்பதிவு எண் அல்லது பாடங்களை மாற்றி எழுதுவது போன்ற குளறுபடிகளை தடுக்ககடந்த 2013-14ம் கல்வியாண்டு முதல்,மாணவர்களின் பெயர்பதிவு எண்தேர்வு தேதிபுகைப்படம்தேர்வு பாடம் தேர்வு மையம் என அனைத்து விவரங்களும் அச்சிடப்பட்ட டாப்சீட்டை விடைத்தாளுடன் இணைக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கும் விடை எழுத நேரமிகுதியாகவும்எளிமையான முறையாகவும் இருந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்மார்ச் 4ம்தேதியும்பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச்15ம் தேதியும் துவங்குகின்றன.
குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமேடாப்சீட்டை விடைத்தாளுடன் இணைப்பதற்கான பணிகள் நடக்கிறது. உடுமலையில்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிபாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிஎஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளிவிசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் இப்பணிகள் துவங்கியுள்ளன.
பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வித்துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்கான டாப்சீட்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளதால்,அப்பாடங்களுக்கான விடைத்தாள்களுடன் டாப்சீட்கள் தைக்கும் பணிகள் நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான சீட்கள் விரைவில் வழங்கப்படுவதாகமாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment