திருவள்ளுர் மாவட்டத்தில், மார்ச் 4ம் தேதி முதல் துவங்கும், பிளஸ் 2 பொது தேர்வை, 104 மையங்களில், 42,387 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி துவங்கி, ஏப்.1ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், மேல்நிலை பொது தேர்வு குறித்த முன்னேற்பாட்டு கூட்டம், ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி உள்ளிட்ட கல்வி, காவல், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்ட விவரம்
104 தேர்வு மையங்களில், 20,770 மாணவர்கள், 21,617 மாணவியர் என, மொத்தம் 42,387 பேர் தேர்வு எழுத உள்ளனர்
17 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, வினாத்தாள் கட்டுக்காப்பாளராக 34 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
தேர்வு நாளன்று பாதுகாப்பாக வினா தாள்களை கொண்டு செல்ல, 58 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
104 தேர்வு மையங்களுக்கு, 2,170 உதவிக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 35 பேர்; மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், 20 பேர்; மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், தலா 10 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
அனைத்து தேர்வு மையங்களிலும், 250 நிரந்தர கண்காணிப்பு படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment