சேலம் மாவட்டத்தில் செய்முறை தேர்வு நடத்தும்,கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ம் தேதி துவங்குகிறது. இதில், தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்குமே, செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு, அதுகுறித்த செய்முறை தேர்வும், அனைத்து மாணவர்களுக்கும், தமிழ், ஆங்கிலம் கேட்டல் பேசுதல் செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், 286 அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இருந்து, 18 ஆயிரத்து, 837 மாணவர்களும், 19 ஆயிரத்து, 754 மாணவியரும் சேர்த்து மொத்தம், 38 ஆயிரத்து, 591 மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்ரவரி, 12ம் தேதி துவங்குகின்றன. இதற்காக, 230க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்,சேலம் சோனா கல்லூரியில் நடந்தது.
இதில், சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, ஆசிரியர்களுக்கான பணி உத்தரவை வழங்கினார். மேலும் செய்முறை தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அதில் குளறுபடிகளை தவிர்க்கும் வகையிலும், ஆலோசனைகள் வழங்கினார். இதில், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment