கோவை மாவட்டத்தில், பிளஸ்2 இரண்டாம் கட்ட செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின; 24ம் தேதி வரை நடக்கவுள்ளது.
தமிழகத்தில், மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கவுள்ளன. செய்முறை தேர்வுகளை, 25ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி, கோவையில் செய்முறை தேர்வுகள் இரண்டு கட்டங்களாக கடந்த, 6ம் தேதி துவங்கியது.
முதல் பிரிவில் இடம்பெற்ற, 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு செய்முறை தேர்வுகள் நேற்றுடன் நிறைவுபெற்றது. இரண்டாம் பிரிவில் இடம்பெற்ற பள்ளிகளுக்கு, இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்கவுள்ளன. முதல் பிரிவு பள்ளிகளை சேர்ந்த பாட ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களாக செயல்படவுள்ளனர்.
இரண்டு கட்ட செய்முறை தேர்வுகளிலும் சேர்த்து கோவையில், 39ஆயிரத்து 417 பேர் பங்கேற்கவுள்ளனர். முதல் பிரிவு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, கணினியில் பதிவு செய்யும் பணிகள் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment