Friday, February 26, 2016

பொதுத்தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைப்பு!

திருப்பூர் மாவட்டத்தில்பொதுத்தேர்வு நடத்துவது குறித்து,அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்
.
பிளஸ் 2 பொதுத்தேர்வுமார்ச் 4ல்துவங்கி ஏப்.முதல் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுமார்ச் 15ல் துவங்கிஏப்., 13ல் முடிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு, 64 மையங்களில், 186பள்ளிகளை சேர்ந்த, 10,240 மாணவர் மற்றும், 12,505 மாணவியர் என, 22,745 பேர் எழுத உள்ளனர். 
தனித்தேர்வர்களாக, 836 பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு, 81மையங்களில், 325 பள்ளிகளை சேர்ந்த, 14,746 மாணவர், 14,918மாணவியர் மற்றும் தனித்தேர்வர்களாக, 1,076 பேர் என மொத்தம், 30,740 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2தேர்வுக்கு ஏழு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு எட்டு மையங்கள்வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
மேல்நிலைத் தேர்வுக்கு மையங்களில், 64 முதன்மை கண்காணிப்பாளர்கள்துறை அலுவலர்கள், 74 பேர்;அறை கண்காணிப்புக்கு, 1,438 பேர் நியமிக்கப்பட உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, 81 தலைமை கண்காணிப்பாளர்கள்; 110 கூடுதல் துறை அலுவலர்கள்; 1,808 தேர்வறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற உள்ளனர்.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில்கலெக்டர் ஜெயந்தி பேசுகையில்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்கவருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்பில் அமைத்துள்ள பறக்கும் படைகள் திடீர் ஆய்வு நடத்தும். மேல்நிலைத் தேர்வுக்கு, 176 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, 190 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்கு வரும் மாணவர்களிடம்இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை இல்லாவிட்டாலும்,சீருடையில் இருந்தால் அரசு பஸ்களில் பயணிக்கலாம். அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதா எனஉறுதி செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment