Tuesday, February 9, 2016

செய்முறை தேர்வு மதிப்பெண்; சென்னைக்கு அனுப்ப முடிவு

செய்முறை தேர்வு மதிப்பெண், 27ம் தேதிக்குள் இறுதி செய்து,பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றுஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கோபிஈரோடு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு மாவட்டங்களிலும்,இந்தாண்டு, 25 ஆயிரத்து, 756 மாணவமாணவிகள் பிளஸ் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் செய்முறை தேர்வு உள்ளது. இதில் அக மதிப்பீடுபுற மதிப்பீடு முறையில் மதிப்பெண் வழங்கப்படும். வரும்,16ம் தேதி செய்முறை தேர்வு துவங்குகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: மாவட்டத்தில், 201 பள்ளிகளில் நடக்கும் செய்முறை தேர்வு, 20ம் தேதியுடன் முடிகிறது. 
வரும், 25 முதல், 27ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் இறுதி செய்யப்படும். இந்த பட்டியலை ஆன்-லைனில் பதிவு செய்துஉடனடியாக மாணவமாணவியரின் தேர்வு எண்ணிலேயே,பள்ளி கல்வி துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறையை மேற்கொள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவர். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment