தர்மபுரி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என, சி.இ.ஓ.,மகேஸ்வரி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு வரும், 4ம் தேதி முதல் துவங்குகிறது. மாவட்டத்தில், 57 தேர்வு மையங்களில், 22,416மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பணியை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பாக செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுகாப்பு மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத்துறையின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாணவர்கள் வசதிக்காக, அனைத்து தேர்வு மையங்கள் முன், பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவ குழு,தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைப்படி, அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் குளறுபடி ஏற்படாமல் இருக்க, குலுக்கல் முறையின் போது அனைத்து நிகழ்வுகளும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment