Thursday, December 31, 2015

மாணவர்கள் படிப்பை நேசிக்க வேண்டும்

திக்க வேண்டும் என்ற ஆர்வம்மாணவமாணவியருக்கு வரவேண்டும்படிப்பை நேசிக்க வேண்டும்எனதமிழக ஏ.டி.ஜி.பி.,சைலேந்திர பாபு பேசினார்.

Wednesday, December 30, 2015

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

Thursday, December 24, 2015

பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் தக்க வைக்க முயற்சி

ஈரோடு: பொது தேர்வுகளில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில்,மாநிலத்தில் முதலிடம் பிடிக்கஈரோடு மாவட்ட கல்வித்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வுகளில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில்மாநிலத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவேஈரோடு மாவட்ட கல்வித்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தமிழகத்தில்ஆண்டுதோறும் விருதுநகர்கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் தான் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால்கடந்த சில ஆண்டுகளாகஈரோடு மாவட்டமும்தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கி உள்ளது. மாவட்டத்தில் ஈரோடுகோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஈரோடு கல்வி மாவட்டம்எஸ்.எஸ்.எல்.சி.,யை பொறுத்தவரை, 2013ல், 95.36 சதவீதம் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம், 2014ல், 97.88 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம், 2015ல், 98.04 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. இதே போல் பிளஸ் 2 தேர்வில், 2013ல், 94.28 சதவீதம் பெற்று மாநிலத்தில் ஐந்தாவது இடம், 2014ல், 97.05சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம், 2015ல், 96.06 சதவீதம் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றது.
இதுகுறித்துகல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2011, 2012ம் ஆண்டுகளில் வெறும், 93சதவீதம் தேர்ச்சியே கிடைத்தது. அதன் பின்னர் படிப்படியாக முதலிடத்தை நோக்கி வந்துள்ளது. மெல்ல கற்கும் மாணவமாணவிகளுக்கு தினமும் மாலை நேரங்களிலும்விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. ஸ்பான்சர்கள் மூலம் அனைத்து பாடங்களுக்கும் ஆன மாதிரி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாட திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தற்போதுதிருப்புதல் பயிற்சி தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுபிளஸ் 2 தேர்வில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடத்துக்குஈரோடு மாவட்டம் தள்ளப்பட்டது.
வணிகவியல்வரலாறுஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்ததே இதற்கு காரணம். எனவேஇந்தாண்டு குறிப்பிட்ட அப்பாட பிரிவுகள் மட்டுமின்றி அனைத்து பாட பிரிவுகளிலும் மாணவர்கள் எளிதில் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பாடங்களை நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டுபிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அலுவலர்கள் கூறினர்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, மழை விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு தாமதத்தால், பிப்ரவரி, இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது' என்றனர்.

Tuesday, December 15, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.
இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள்விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகளில் சூழ்ந்த வெள்ள நீர் சீர்ப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு, செயல்படத் துவங்கியுள்ளன.இந்நிலையில், மாணவர்களுக்குப் பாடங்கள் முடிக்காத நிலையில் உள்ளதால், பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி குறைந்தபட்சபாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

Saturday, November 28, 2015

பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது.
ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது

Wednesday, September 16, 2015

பிளஸ் 2 தனித்தேர்வு 18 முதல் 'ஹால் டிக்கெட்'


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

Friday, August 14, 2015

இரு பாடங்களில் சறுக்குவது ஏன்கல்வித்துறை இயக்குனர் கேள்வி


“பிளஸ் 2 தேர்வில், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் பேசினார்.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சிஅளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், நேற்று சேலத்தில் நடந்தது. இதில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் பேசியதாவது:
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக தேர்ச்சி விகிதம், வியக்கத்தக்கதாக உள்ளது. எனினும், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது.
மாணவர்களுக்கும், மாணவியருக்கும் இடையிலான தேர்ச்சி விகிதமும், 10 சதவீதம் வரை, வேறுபாடு உள்ளது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யவும், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாக அதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, June 13, 2015

'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது'


கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பயாலாஜி தேர்வில் வினாத்தாள் மிக கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நன்கு படித்த மாணவ, மாணவியரும் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுயநிதி பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
பிளஸ் 1 சேர்க்கையை பொறுத்தவரை, கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய தேர்வு செய்வதில், மாணவர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம். ஏனெனில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த பிரிவையும் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். இதனால், இந்த பிரிவில் சேர, அதிக போட்டியும் இருந்து வந்தது.
நடப்பு கல்வியாண்டில்:ஆனால், கடந்த ஆண்டு வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், கடந்த ஆண்டை விட, நடப்பு கல்வியாண்டில், மேத்ஸ், பயாலஜி அடங்கிய முதல் பிரிவில் சேர்வதற்கான ஆர்வம், மாணவ, மாணவியரிடையே கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மேல்நிலைக்கல்வியில், உயிரியல் பிரிவில், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய இரு பாடங்கள் உள்ளன. இதில் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரை, 75 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவதாக இருந்தாலும், 150 மதிப்பெண் அளவுக்கு பாடம் அதிக அளவில் உள்ளது.அதாவது பியூர் சயின்ஸ் குரூப்பில் உள்ள விலங்கியல் தேர்வுக்கு, 150 மதிப்பெண்களுக்கு, 8 பாடம் படிக்க வேண்டும் என்றால், 'உயிர்-விலங்கியல்' தேர்வுக்கு, 75 மதிப்பெண்களுக்கு, 7 பாடங்கள் படிக்க வேண்டும்.
இதனால், சராசரியாக இருக்கும் மாணவர்களிடையே தடுமாற்றம் ஏற்படுகிறது.நான்கு பாடங்களிலும், 'சென்டம்' எடுக்க முடியும் என்ற மாணவர்களுக்கு, முதல் குரூப் எடுப்பதில், எவ்வித சிரமமும் இருப்பதில்லை. சராசரி மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களும், 'உயிரியல்' எடுத்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள். கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு அதிக உழைப்பு தேவையில்லை' என, திசை திருப்பிவிடுகின்றனர்.
சிறந்த சாய்ஸ்:இதனால், சராசரியாக படிக்கும் மாணவர், இன்ஜினியரிங் செல்ல வேண்டும் என, ஆசைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அடங்கிய குரூப் சிறந்த சாய்ஸாக உள்ளது. எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டாலும், நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவத்துறை தான், என்னுடைய சாய்ஸ் எனக்கூறும் மாணவர்களுக்கு, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய பியூர் சயின்ஸ் குரூப்
கைக்கொடுக்கும்.
ஊரக பகுதிகளில், பியூர் சயின்ஸ் குரூப்பில் சேர, அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நகர்ப்புறங்களில், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு, உயிரியல், கணிதம் அடங்கிய குரூப்பில் சேர, ஆர்வம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, May 23, 2015

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்


பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டது. வெறும் 124 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனர். உயிரியல் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இந்த விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சோதிக்கப்படும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் அடுத்த வாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு பாடமாக விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தப் பணிகள் அனைத்தையும் மே இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களே விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகிய முடிவுகள் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறு கூட்டல், மறு மதிப்பெண்ணுக்குப் பிறகு மதிப்பெண்ணில் மாறுதல் இருந்தால் அவை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே, பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்முறையாக இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத் தக்கதாக இருக்கும் என்பதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் சற்றுத் தாமதமாக வழங்கப்படுகிறது.

Friday, May 15, 2015

தற்காலிக மதிப்பெண் சான்றிதழால் பதிவில் சிக்கல்


பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில் வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், மாற்றுச் சான்றிதழும் நேற்று பள்ளிகளில் வழங்கப்பட்டன. தற்காலிக சான்றிதழில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தேர்வுப் பதிவு எண், பயிற்று மொழி, பள்ளியின் பெயர், பாடப்பிரிவின் பெயர், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் தனித்தனி மதிப்பெண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சான்றிதழ் எண் பதிவிட வேண்டிய இடத்தில், 'டி.எம்.ஆர்., கோட்' எனப்படும், மதிப்பெண் பதிவேடு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த சான்றிதழ் மூலம், சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வேலைவாய்ப்பு பதிவுக்கு சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை பதிவு செய்யும் போதோ அல்லது அவரது படிப்பை, 'அப்டேட்' செய்யும்போதோ, மதிப்பெண் சான்றிதழ் எண்ணை, 'ஆன் - லைனில்' கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், 'டி.எம்.ஆர்., கோட்' எண் மட்டுமே உள்ளது; சான்றிதழ் எண் இல்லை. அதனால், அசல் மதிப்பெண் சான்றிதழ் எண் வந்த பின், வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும், என்றார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்


பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்வியாழக்கிழமை தொடங்கியது.முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.8.8 லட்சம் மாணவர்கள்:
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டனர்.இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுடன் மதிப்பெண் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு, முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.இதன்படி, அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மே 14-ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு,தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வரும் நாள்களிலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அசல் சான்றிதழ் எப்போது?
நடப்பாண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.எனினும், பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் கிடைத்த பிறகு, அனைத்து மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்! : புதியதிட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்பு


பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, மாநில அளவில் தற்காலிகமதிப்பெண் சான்றிதழ், பள்ளிகள் வாயிலாக, நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. முதன்முறை செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கடந்த, 7ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், உயர்கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், மாணவர்கள் கல்லுாரிகள் தேர்வு செய்வதில் எவ்வித சிக்கல்களும்,தாமதமும் எழாத வகையில், முதல் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில், காலை, 9:30 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி நடந்தது. இத்துடன், மாணவர்களின், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களையும் வழங்க அரசுத்தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் முறையாக வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், மாணவரின் புகைப்படம், மதிப்பெண் விபரம், பயிற்று மொழி, பிறந்த தேதி, பதிவு எண், பாட தொகுப்பு எண்,பள்ளியின் பெயர், தேர்வு முடிவுகள் வெளியானது முதல் எத்தனை நாட்கள் செல்லும் என்ற விபரங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளன.மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், உடனடியாக தலைமையாசிரியரே பிழைகளில் திருத்தம் செய்து சான்றொப்பம் இட்டு வழங்கவும், அப்பிழைகள் குறித்து அரசு தேர்வுத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அசல் மதிப்பெண் பட்டியலில், 100 சதவீத பிழைகள் தவிர்க்கப்படும்.அரசு பள்ளி தலைமையாசிரியை சந்திரசேகர் கூறுகையில்,''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திட்டம் நல்ல முயற்சி. உயர்கல்வியில் மாணவர்கள் எவ்வித தாமதமும்இல்லாமல் சேரலாம். அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

Saturday, May 9, 2015

பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது

.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும். வரும் 14-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்

Wednesday, May 6, 2015

தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும்சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.தேர்வு கட்டணமும், செலுத்தும் முறையும் மார்ச் 2015, பிளஸ்-2 தேர்வில்தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த வேண்டும்.தேர்வுக் கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி கல்வித்துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு ஒரு அறிக்கையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் 2 தேர்வு - நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.
*மே 8 முதல் 14வரை மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்.அப்போது வழங்கும் ஒப்புகை சீட்டு பத்திரமாய் வைத்திருக்கவும்
*தற்காலிக மதிப்பெண் சான்று மே 14.மே 18முதல் தேர்வு துறை இணையத்தில் பெறலாம்
*ஜுன் இறுதியில் தனித்தேர்வு.மே 15முதல் 20வரை விண்ணப்பிக்கலாம்

Saturday, May 2, 2015

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பது குறித்து, பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதி தமிழக தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது. கல்லூரிகளில் உள்ள, 'புரவிஷனல்' சான்றிதழ் போல், இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், உயர் கல்வியில் சேர்வதற்கான அத்தாட்சியாக இருக்கும். இந்த சான்றிதழை எப்படிப் பெறுவது என்பது குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா பிறப்பித்து உள்ளார். அதில், 'தேர்வு முடிவு கள் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத் துறையின், http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் பள்ளிகள் மூலம், முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின், மாணவ, மாணவியர் தங்கள் தேவைக்கேற்ப பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்' எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சான்றிதழ்களை, கல்லூரி படிப்பில் சேர பயன்படுத்திக் கொள்ள அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகல்கள் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Sunday, April 5, 2015

கல்வி துறை அதிரடி திட்டம் 'ஆன் - லைனில்' விடைத்தாள் நகல்:


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்' மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி முடிய உள்ளது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தேர்வு முடிவு வெளியானதும், மேற்படிப்புக்காக, கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கூடுதல் வசதியாக,மாணவ, மாணவியர் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு, 'ஆன் - லைன்' மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரைநடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழி விடைத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டது.
இன்று அல்லது நாளைக்குள் எந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து, அதற்குரிய கமிட்டி முடிவு செய்து அறிவித்து விடும்.
பின்னர் அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும் இதுகுறித்து தகவல் அனுப்புவார்.6-ந்தேதி முதல் பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. மதிப்பீடு செய்யும் பணி 13-ந்தேதி முடிவடைய இருக்கிறது.அதன்பின்னர் மதிப்பெண்கள் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு, மே முதல் வாரத்தில் கடந்த ஆண்டு போல் தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.மாணவர்கள் நலன் கருதி, முடிந்தால் முன்கூட்டியே முடிவை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர்களுக்கு இணையதளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை

பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் விலங்கியல் பிரிவு மிகக் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்ததோடு, போட்டித் தேர்வு அளவுக்கு வினாக்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. வினாக்களில் எந்தப் பிழைகளும் இல்லை என்பதால் கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற விலங்கியல், தாவரவியல் பிரிவுகளையும் சேர்த்து 30 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதால் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானவைதான். ஆனால், எம்.பி.பி.எஸ். அல்லது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்று, தசைச் சிதைவு நோய்க்கான காரணங்கள், நாடித் துடிப்பு குறைவதற்கான காரணங்கள் போன்ற கடினமான கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. புத்தகம் முழுவதும் படித்த மாணவர்கள் கூட விலங்கியல் பிரிவில் 75-க்கு 50 அல்லது 60 மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. ஆனால், இந்த வினாத்தாள்களிலிருந்து 5 மதிப்பெண் அளவுக்கே கேள்விகள் பொதுத்தேர்வில் வந்துள்ளன. எனவே, விடைத்தாள் திருத்துவதில் சற்றுத் தாராளமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவு கடினமாக இருந்தாலும், தாவரவியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன
பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் ஜாதிச்சான்று வழங்க ஏற்பாடு
திண்டுக்கல்:பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடுசெய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்டபின்பே ஜாதி, இருப்பிடம் போன்றசான்றுகளை கேட்டு மாணவர்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர். ஒரே சமயத்தில் அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் சான்றுகள் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தேர்வு முடிவுக்கு முன் தாலுகா அலுவலகங்கள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் 'ஆன்-லைனில்' சான்றுகளை வழங்கவருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே சான்று பெற்றோர் அதன் நகல்களைபெறலாம். மேலும் மெய்த்தன்மை குறித்து சந்தேகம் ஏற்படாத வகையில் சான்றுகளில்ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்
எந்த படிப்பு சம்பளத்தை அள்ளிக் கொட்டும்: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை
"உயர் கல்வியில் எந்த படிப்பை தேர்வு செய்தால் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனைகள் வழங்கினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: எதிர்காலத்தில் எந்த துறைகளில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை ஆலோசித்து அத்துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும். குறிப்பாக, ஒரு கம்பெனியில் ஊழியர் ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கினால் அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வருவாயை அந்நிறுவனம் எதிர்பார்க்கும். இதன் அடிப்படையில் தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இது அந்நிறுவனம் சார்ந்த துறையில் எதிர்கால வளர்ச்சி இருந்தால் தான் இது சாத்தியம் ஆகும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் வேளாண்மை, மின்சாரம், உள்கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.இ.இ., சிவில் பிரிவுகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இவற்றை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். 87 சதவீதம் பொறியியல் மாணவர்களுக்கு ஐ.டி., துறையில் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து மெக்கானிக் இன்ஜி., படிப்பை தேர்வு செய்யலாம். 4 சதவீதம் பெண்கள் தான் இப்படிப்பை தேர்வு செய்கின்றனர். இதனால் இப்பிரிவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன. தேவையான 'கட்ஆப்' மதிப்பெண்கள் இருந்தால் மருத்துவ படிப்பை தேர்வு செய்யலாம். கிடைக்காதபட்சத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை தொடர்பான படிப்புகளை தேர்வு செய்யலாம். இதற்கு அடுத்து, கால்நடை படிப்பிற்கும், பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம். தற்போது பி.டெக்., (பால்வளம் தொழில் நுட்பம்), கோழி வளர்ப்பு பற்றிய படிப்புகள் முடித்தால் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. கலைப் பிரிவுகளில் பி.ஏ., பொருளியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்பின் சட்டப் படிப்பை தேர்வு செய்யலாம். 2018 ம் ஆண்டில் வக்கீல்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். சட்டப் படிப்பு முடித்தால் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர் பணிகள் காத்திருக்கின்றன. பி.டெக்., கட்டடக் கலை, பி.எஸ்சி., பாரஸ்டிரி படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்
பிளஸ்-2 தேர்வில் கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம்!
'பிளஸ்-2 தேர்வு இப்போதுதானே முடிஞ்சது. தேர்வு முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லையே...அதற்குள்ளாக கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம் என்று சொல்லுறாங்களே!' ன்னு நீங்கள் தலையை பிய்த்து கொள்வது புரிகிறது. கொஞ்சம் பொறுங்க பாஸ். பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கையில்தான் சார் இந்த இரண்டு மாவட்டங்களும் முதலிடத்தை பிடித்திருக்கின்றன.
பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதியுள்ளனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கி, மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு, அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்தபோதுதான் பிட் அடித்த மாணவர்கள் பிடிபட்டனர்.
இதில் தமிழ் பாடம் முதல் தாளில் 5 மாணவர்கள் பிடிப்பட்டனர். அதுபோல், தமிழ் இரண்டாம் தாளில் 11 பேர் பிடிப்பட்டுள்ளனர். ஆங்கிலம் முதல் தாளில் 36 பேர், இரண்டாம் தாளில் 15 பேர், கணக்கில் 20 பேர், இயற்பியல், வணிகவியல் பாடத்தில் 46 பேர், வேதியியல், கணக்கு பதிவியல் பாடத்தில் 67 பேர், பொருளாதாரத்தில் 63 பேர், உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் 33 பேர், கணக்கு பாடத்தில் 50 பேர் பிட் அடித்து பிடிப்பட்டுள்ளனர். மொத்தத்தில் காப்பி அடித்தது, பிட் அடித்தது போன்ற செயல்களில் மொத்தம் 356 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
இதில் கடலூர் மாவட்டத்தில் 81 பேரும், வேலூர் மாவட்டத்தில் 81 பேர் என்று பிட் அடித்து மாட்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த இரு மாவட்டங்களும் இந்த ஆண்டு முதலிடத்தை பெற்றிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேர் பிட் அடித்து மாட்டி 2வது இடத்தை பிடித்துள்ளது

Thursday, April 2, 2015

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
விடை எழுத முடியாமல் தவிப்பு
தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்துதான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர்தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத்திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. தவறான வினா குறித்த செய்தி, நமது நாளிதழில் மார்ச் 21ம் தேதி செய்தி வெளியானது.
வினாக்கள் குளறுபடி
இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விக்கு, மொத்தம் 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Wednesday, April 1, 2015

 பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப். 6 முதல் புத்தகங்கள்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.
அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 புத்தகங்கள் 100 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன.
பத்தாம் வகுப்புக்கான புத்தகங்களும் மாவட்டங்களுக்கு பெரும்பாலும் அனுப்பப்பட்டு விட்டன. 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்ததும் இந்த மாணவர்களுக்கான புத்தகங்களும் விநியோகிக்கப்பட உள்ளன.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.
இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.
வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு
பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகைகேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது கேள்விகள் பிழையாககேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக 10வது கேள்வியில் யுரேனியம் அணுத்துகள், ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியாகும் ஆல்பா, பீட்டா கதிர்கள் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்டு இருந் தது. அதில் ஈயத்தின் மதிப்பு 206 என்பதற்கு பதிலாக 108 என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. அதனால் அந்த கேள்வியின் விடைக்கு சரியான கணக்கீடு கிடைக்காமல் மாணவர்கள் திணறினர்.
அதேபோல 22வது கேள்வியில் வெப்ப இயக்கவியல் தொடர்பாக கொடுக்கப்பட்ட விடையில் 0.032 என்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் தவறாக கொடுக்கப்பட்டு இருந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. வேதியியல் பாடத்தின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10, 22வது கேள்விகளுக்கு விடை எழுத முற்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி
பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.இந்த தேர்வில் கணிதத்தேர்வில் ஒருகேள்வி குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்தக்கேள்வியில் கேட்பப்பட்டது மைனசா, பிளஸா என்று தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.
அதுபோல வேதியியல் தேர்வில் 10-வது கேள்வியும் சரியாக கேட்கப்படவில்லை. 22-வது கேள்வியில் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் சரி இல்லை. மேலும் பொருளாதார தேர்வில் 78-வது கேள்வி 20 மதிப்பெண்ணுக்கு உரியது.அந்த கேள்வி பற்றியும் பிரச்சினை கிளப்பப்பட்டது. எனவே பிளஸ்-2 கணிததேர்வு, வேதியியல் தேர்வு, பொருளாதார தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளில் எந்த தேர்வுக்கு? எத்தனை கருணை மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளீர்கள்? என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பதில் அளிக்கையில் “ஒவ்வொரு பாடத்திற்குரிய தேர்வுக்கும் தனித்தனியாக சரியான விடை அளிப்பதற்கான கமிட்டி போடப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இன்னும் அறிக்கை தரவில்லை. அதனால் கருணை மதிப்பெண் போடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
பிளஸ்-2 தேர்வில் கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம்!
'பிளஸ்-2 தேர்வு இப்போதுதானே முடிஞ்சது. தேர்வு முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லையே...அதற்குள்ளாக கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம் என்று சொல்லுறாங்களே!' ன்னு நீங்கள் தலையை பிய்த்து கொள்வது புரிகிறது. கொஞ்சம் பொறுங்க பாஸ். பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கையில்தான் சார் இந்த இரண்டு மாவட்டங்களும் முதலிடத்தை பிடித்திருக்கின்றன.
பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதியுள்ளனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கி, மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு, அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்தபோதுதான் பிட் அடித்த மாணவர்கள் பிடிபட்டனர்.
இதில் தமிழ் பாடம் முதல் தாளில் 5 மாணவர்கள் பிடிப்பட்டனர். அதுபோல், தமிழ் இரண்டாம் தாளில் 11 பேர் பிடிப்பட்டுள்ளனர். ஆங்கிலம் முதல் தாளில் 36 பேர், இரண்டாம் தாளில் 15 பேர், கணக்கில் 20 பேர், இயற்பியல், வணிகவியல் பாடத்தில் 46 பேர், வேதியியல், கணக்கு பதிவியல் பாடத்தில் 67 பேர், பொருளாதாரத்தில் 63 பேர், உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் 33 பேர், கணக்கு பாடத்தில் 50 பேர் பிட் அடித்து பிடிப்பட்டுள்ளனர். மொத்தத்தில் காப்பி அடித்தது, பிட் அடித்தது போன்ற செயல்களில் மொத்தம் 356 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
இதில் கடலூர் மாவட்டத்தில் 81 பேரும், வேலூர் மாவட்டத்தில் 81 பேர் என்று பிட் அடித்து மாட்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த இரு மாவட்டங்களும் இந்த ஆண்டு முதலிடத்தை பெற்றிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேர் பிட் அடித்து மாட்டி 2வது இடத்தை பிடித்துள்ளது.

Friday, March 27, 2015

இன்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வு
பி.இ. படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.இந்தத் தேர்வுடன் பொறியியல் படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடத் தேர்வுகள் முடிவு பெறுகின்றன.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடத்தேர்வுகள் பிளஸ் 2 இறுதித் தேர்வான உயிரியல் பாடத் தேர்வுடன் மார்ச் 31-ஆம் தேதி முடிவடைகிறது.பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக, கடைசியாக நடைபெறும் கணினி அறிவியல் தேர்வு இந்த ஆண்டு முக்கியப் பாடத்தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டது.
முக்கியப் பாடத் தேர்வுகள் கணிதத் தேர்வுடன் மார்ச 18-ஆம் தேதி தொடங்கின.வேதியியல் பாடத் தேர்வு மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்றது.பெரும்பாலான மாணவர்கள் கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்றுக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.இந்தப் பாடத்தில் "ஏ' வரிசை வினாத்தாளில் 10, 22-வது ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கணிதத் தேர்வு எளிமையாகவும், வேதியியல் தேர்வு சற்றுக் கடினமாகவும் இருந்தது.இந்த நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பி.இ.-எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய வேதியியல் தேர்வு காரணமாக குறையும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை இயற்பியல் தேர்வு ஈடு செய்யும் என மாணவர்கள் கருதுகின்றனர்.

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்
சேலம்: மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.
முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்; இதுபோன்ற நிலைமை, கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு, ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள் முறைகேட்டிற்கு பின், வரிசையாக, பல முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை அடுத்து, தேர்வுத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 'பிட்' அடிக்கும் மாணவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என அறிவித்து, இதுவரை, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துவிட்டனர். அறிவித்தபடி, கல்வித் துறை நடவடிக்கை எடுப்பதால், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலக்கமும், பீதியும் அடைந்து உள்ளனர். 'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மீதான பிடியை இறுக்க துவங்கி உள்ளனர். அலட்சிய போக்கை கைவிட்டு, தேர்வு துவங்கும் முன், மாணவர்களை தீவிரமாக சோதனை செய்கின்றனர். மேலும், தேர்வு முடியும் வரை, கண்கொத்தி பாம்பாக, ஒவ்வொரு மாணவரையும், தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது, தயவு, தாட்சண்யம் இன்றி, உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளில் சிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, சில ஆசிரியர் கூறியதாவது:
கடந்த காலங்களில், பறக்கும் படையினரிடம் பிடிபட்டால் மட்டுமே உண்டு என்ற நிலை இருந்தது. இதனால், பல தனியார் மையங்களில், 'கேட்' அருகில், நீண்ட நேரம் பறக்கும் படையினரை காக்க வைத்த நிலையும் இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தனியார் தேர்வு மையங்களில் மட்டுமின்றி, அனைத்து ஆசிரியர்களிடையேயும் அலட்சிய போக்கை அகற்றி, தேர்வு குறித்த பொறுப்புணர்வை அதிகப்படுத்தி உள்ளது. இந்த கெடுபிடியை, வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்ற, தேர்வுத் துறை முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?
பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி வி.ரீனா சார்பில் அவரது தந்தை என்.வீரண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் ரீனாநிகழ் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 (உயிரியல் - கணிதப் பாடப்பிரிவு) படிக்கிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.மாநிலம் முழுவதும் கடந்த 18-ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. அதில் எனது மகளும் பங்கேற்றார். இந்த நிலையில், ஒசூரில் கணிதத் தேர்வு வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகைப்படம் எடுத்து பலருக்கு அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என கடந்த 22-ஆம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து முறைகேடு செய்ததாக கல்வித் துறையைச் சேர்ந்த 118 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது. தேசிய அளவில், மாநில அளவில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு தகுதியானவர், தகுதியற்றவர் என்பது ஒரு மதிப்பெண்ணில் முடிவு செய்யப்படுகிறது.மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான கட் -ஆப் மதிப்பெண்ணை விட ஒரு மாணவர் அரை மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தால் அவருக்கு தனியார் கல்லூரிகள் மிகப்பெரிய தொகையை நிர்ணயிக்கின்றன.சமூக வலைதளத்தில் வினாத்தாள் வெளியானதால் நன்றாகப் படித்து தேர்வு எழுதும் மாணவர்களை இது பாதிக்கும். அதனால், கணிதப் பாடத்துக்கு கண்டிப்பாக மறு தேர்வுநடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கடந்த 22-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த எந்தவொரு எண்ணமும் இல்லை எனகல்வித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார்.
எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த கல்வித் துறை இயக்குநருக்கு உத்தர விட வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையின்படி பிளஸ் 2 தேர்வின் கணிதப் பாடத்துக்கு ஏன் மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கூடாது என வரும் ஏப்ரல்7-ஆம் தேதிக்குள் அரசு வழக்குரைஞர் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள்மீது பிடியை இறுக்குகின்றனர்
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்; இதுபோன்ற நிலைமை, கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு, ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள் முறைகேட்டிற்கு பின், வரிசையாக, பல முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை அடுத்து, தேர்வுத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 'பிட்' அடிக்கும் மாணவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என அறிவித்து, இதுவரை, ஆறு ஆசிரியர்களை,'சஸ்பெண்ட்' செய்துவிட்டனர். அறிவித்தபடி, கல்வித் துறை நடவடிக்கை எடுப்பதால், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலக்கமும்,பீதியும் அடைந்து உள்ளனர். 'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மீதான பிடியை இறுக்க துவங்கி உள்ளனர். அலட்சிய போக்கை கைவிட்டு, தேர்வு துவங்கும் முன், மாணவர்களை தீவிரமாக சோதனை செய்கின்றனர். மேலும், தேர்வு முடியும் வரை, கண்கொத்தி பாம்பாக, ஒவ்வொரு மாணவரையும், தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது, தயவு, தாட்சண்யம் இன்றி, உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளில் சிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, சில ஆசிரியர் கூறியதாவது:
கடந்த காலங்களில், பறக்கும் படையினரிடம் பிடிபட்டால் மட்டுமே உண்டு என்ற நிலைஇருந்தது. இதனால், பல தனியார் மையங்களில், 'கேட்' அருகில், நீண்ட நேரம் பறக்கும் படையினரை காக்க வைத்த நிலையும் இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தனியார் தேர்வு மையங்களில் மட்டுமின்றி, அனைத்து ஆசிரியர்களிடையேயும் அலட்சிய போக்கை அகற்றி, தேர்வு குறித்த பொறுப்புணர்வை அதிகப்படுத்தி உள்ளது. இந்த கெடுபிடியை, வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்ற, தேர்வுத் துறை முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Monday, March 9, 2015

பள்ளிகளில் காணாமல் போகும் தொழில்கல்வி பாடப்பிரிவு?
கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக, 81 பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவு மூடுவிழாவை கண்டுள்ளது.
தற்போது, வெறும் 41 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே, தொழில்கல்வி பாடப்பிரிவுஅவலநிலையில் செயல்பட்டு வருகின்றது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையில், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டுக்கு, பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, நான்கு சதவீதம் பொறியியல் கல்லுாரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லுாரிகளில் 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டபோது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும்போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என, தொழில்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொழில்கல்வி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பாமை, 35 ஆண்டுகளாகதொழில்நுட்பத்திற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காததன் காரணமாகவே, தொழில்கல்வி பாடப்பிரிவு முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 122 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 23 அரசு மேல்நிலை மற்றும், 18 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே, தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மேல்நிலை தொழில்கல்வி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில், தற்போது, 36 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களும், ஓய்வுபெறும் நிலையில் உள்ளதால், விரைவில், தொழில்கல்விபாடப்பிரிவு எந்த பள்ளிகளிலும் இல்லாத சூழல் ஏற்படும். மத்திய அரசு, தொழில்கல்விக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், மாநில அரசு அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என தோன்றுகிறது "என்றார்.
பிளஸ் 2 தேர்வறையில் மாணவிக்கு தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வறையில் மாணவிக்கு தொல்லை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, தேர்வு மைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். முதல் நாள் தேர்வின்போது, இந்த மையத்தில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு எழுதினார். இந்த மாணவியிடம் தேர்வு அறைக் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஜாம்சன் சில்மிஷம் செய்தாராம். இதுகுறித்து, அந்த மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி திங்கள்கிழமைக்குள் (மார்ச் 9) அறிக்கை தருமாறு முதன்மை கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, புகார் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியாற்றிய அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் அவரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
புகார் குறித்து தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ஜேக்கப் அருள்மாணிக்கம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது புகாருக்குள்ளான ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்ததும் அவர் மீது கல்வித் துறை சார்பில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியவை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Saturday, March 7, 2015

ஸ்ரீரங்கம் குறித்து கேள்வி: காதுகேளாதோருக்கு சிறப்பு வினா
பிளஸ் 2 தேர்வு தமிழ் இரண்டாம் தாளில், ஸ்ரீரங்கம் குறித்து ஒரு மதிப்பெண்ணில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. காது கேளாத மாணவர்களுக்கு மட்டும், ஒரு கேள்வி தனியாக இடம் பெற்றிருந்தது.
அரசுத் தேர்வுத் துறையின் அதிரடி மாற்றங்களுடன், பிளஸ் 2 தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, தமிழ் வழியில் கற்றவர்களுக்கு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. தமிழ் இரண்டாம் தாளை பொறுத்தவரை, மொத்தம், 80 மதிப்பெண்களுக்கு, எட்டு பிரிவுகளில், 32 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இதில், பத்து, இருபது வரிகள் மற்றும் ஒரு பக்கம் எழுதுதல், உவமை, உருவகம், எதுகை - மோனை, கற்பனைக் கட்டுரை போன்ற வகைகளில், கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதில், 'ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கநாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது' என்ற கேள்விக்கு, வடமொழிச் சொற் கலப்பை நீக்க எழுத குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோல், சொந்த வீடு கட்ட கடன் வாங்கி அல்லற்பட்ட, இரண்டு பேர் சந்தித்து உரையாடுவதைக் கற்பனைக் கட்டுரை எழுதும் கேள்வியும் இடம் பிடித்தது. மேலும், ஆங்கிலப் பழமொழிகளைத் தமிழில் மொழி பெயர்க்கும் கேள்வி, காதுகேளாத மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மொழி பெயர்ப்புக்குப் பதில், தனியாக கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை தரப்பட்டு, அதிலிருந்து கேள்வி கள் கேட்கப்பட்டிருந்தன.

Thursday, March 5, 2015

பொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...
தேர்வுக்கு கொடுக்கப்படும் பலவிதமான ஆலோசனைகளையும், அடுக்கடுக்கான அறிவுரைகளையும் பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் வரலாம்.
நாம் என்ன போர்க்களத்திற்கா செல்கிறோம்? நமக்கென்ன உயிரா போகப்போகிறது? என்று அவர்கள் சலித்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் ஒருவகையில் போர்க்களம் போன்றதுதான்.
அங்கே நமது உயிரெல்லாம் போகாது. ஆனால், பலருக்கு, நினைத்த வாழ்க்கைப் போய்விடுகிறது. தேர்வில் மதிப்பெண் குறைவதின் மூலம், நினைத்த உயர்கல்விக்கு செல்ல முடியாமல், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்வில் தங்களின் பிடிப்பையே இழக்கிறார்கள்.
மருத்துவம், பொறியியல் மற்றும் வேறுசில துறை படிப்புகளுக்கு மட்டுமல்ல, இன்றைய நிலையில், எந்த துறையை எடுத்துப் படிக்க வேண்டுமானாலும், (அதாவது இந்தியாவில் வேலை வாய்ப்பை வழங்கும் துறை மற்றும் உலகளவில் அதிகளவு பணி வாய்ப்பைக் கொண்டுள்ள துறைகள்) விரும்பிய கல்லூரிகளில் சேர வேண்டுமெனில், மதிப்பெண்ணே அடிப்படை தகுதியாக இருக்கிறது.
ஒரு மாணவர், எந்தளவிற்கு திறமை வாய்ந்தவர் என்பதையெல்லாம், விரிவான முறையில் ஆய்வுசெய்யும் வகையில், நமது பள்ளிக் கல்விமுறை கிடையாது. மதிப்பெண் மட்டுமே அறிவு மற்றும் தகுதியை மதிப்பிடுவதற்கான ஒரு அளவீடாக உள்ளது.
இன்றைய நிலையில், தேர்வில் முதல் மதிப்பெண் அல்லது அதிக மதிப்பெண் வாங்க வைப்பதென்பது, பெரும் வணிக நடவடிக்கையாகவே மாறிவிட்டது. களத்தில் நிற்கும் பல தனியார் பள்ளிகள், தங்களின் மாணவர்களை, மாநில முதல் மதிப்பெண் பெற வைப்பதற்கு, பல்வேறான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. (அவற்றில் சில சட்டவிரோதமானவை என்ற புகார்களும் உண்டு).
நாம், அம்மாதிரி பள்ளிகளுடன் போட்டிப்போட வேண்டியதில்லை. நம் அளவிற்கு சிறப்பாக படித்து, சரியான முறையில் தேர்வெழுதி, முடிந்தளவிற்கு அதிக மதிப்பெண் பெறுவோம். நமது மதிப்பெண் மாநில அளவிலான மதிப்பெண்ணாகவோ அல்லது மாவட்ட அளவிலான மதிப்பெண்ணாகவோ அல்லது பள்ளியளவில் முதல் மதிப்பெண்ணாகவோ அமையலாம்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை விட, பிளஸ் 2 மதிப்பெண், பல விஷயங்களுக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. முன்பெல்லாம், கலை-அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் பட்டப் படிப்பில், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், விலங்கியல், தாவரவியல், உளவியல் உள்ளிட்ட பல படிப்புகளில் சேர, அந்தளவிற்கு அதிகப் போட்டி இருக்காது. மேற்கண்ட பல படிப்புகளில், மாணவர்கள் போதிய அளவு சேராமல், காலியிடங்கள் எஞ்சியிருக்கும். எனவே, ஒருவர் கேட்டவுடன் சீட் கிடைக்கும்.
ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதோடுமட்டுமின்றி, பொறியியல், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு, முன்புபோல, மாணவர்கள் முட்டி மோதுவதில்லை. எனவே, கலை - அறிவியல் கல்லூரிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது.
கலை - அறிவியல் கல்லூரிகளில், இடங்கள் நிரம்பாமல், காலியாக இருந்த துறைகளுக்கு, இப்போது கடும் போட்டி. மதிப்பெண் குறைவாக இருக்கும் மாணவர்கள் கூட, அதிக நன்கொடை கொடுத்து சேர்வதற்கு தயாராக உள்ளனர்.
உயர்கல்வியின் நிலை இப்படி மாறிவிட்ட சூழலில், பொதுவாக, மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மாணவர்களை சேர்க்கும் ஒரு நடைமுறையில், நமது மதிப்பெண் குறைந்தால், நாம் எந்த நிலைக்கு ஆளாவோம் என்பதை சற்று யோசித்துப் பார்க்கவும்.
இந்திய கல்வித் திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற போராட்டம் ஒருபுறம் இருக்கட்டும். அது, இப்போதைக்கு நடக்காத காரியம். எனவே, விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பை மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதன்மூலம், அரசு பொதுத்தேர்வுகள் என்பவை, உண்மையான போர்க்களமாக இல்லை என்றாலும், அதை எதிர்கொள்ள, போர்வீரன் போன்று தயாராக வேண்டியது அவசியமாகிறது.
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்.....
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
• படிக்கும் இடம் சிறியதாக இருந்தாலும், எந்த வகையிலும் கவனத்தை திசை திருப்பக் கூடியதாக இருக்கக் கூடாது.
• பகலிலும், இரவிலும் போதுமான வெளிச்சம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
• நல்ல காற்று வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.
• படிக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
• உங்களது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி, தொலைபேசி போன்றவைகள் இல்லாமல் இருந்தால், கவனம் சிதறாது.
• நீங்கள் படிப்பதற்குத் தேவையான அனைத்து புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பிற பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பொருட்களைத் தேடுவதற்காக அதிக நேரத்தைச் செலவழிக்காதீர்கள்.
• படிக்கும் இடத்தில் படுக்கை இருப்பதைத் தவிர்க்கவும். படுக்கை இருந்தால் படுத்துக் கொண்டே படிக்கலாம் என்று எண்ணம் தோன்றும்.
• குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நீங்கள் படிக்கும் இடத்திற்கு வந்து போகும் இடமாக இருக்கக் கூடாது.
• இரவில் குடிப்பதற்கு படிக்கும் அறையிலேயே தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
• காலையில் எழுந்தவுடன் உங்கள் அறையிலேயே சிறிது நேரம் யோகா அல்லது தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் நினைவு திறன் அதிகரிக்கும்.
பத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்கான வழிகள்
நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும். நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால், நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் (Increase your confidence level). இதற்குத் தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிப் போடுங்கள்.
ஆர்வம்
எந்த ஒன்றில் வெற்றிபெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது ‘இந்தப் பாடம் கடினமான பாடம்’ என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கிறது.
‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை. சில பாடங்கள் ஒருமுறை படித்தால் புரியும். சில பாடங்கள் பலமுறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் பல பேர் நூற்றுக்கு நூறு எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி
மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி. நன்றாகப் படித்தேன், ஆனால் தேர்வு அறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது. பாடத்தில் ஆர்வமின்மையை இது காட்டுகிறது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறந்துபோகிறது. சினிமா பாடல் கேட்கும்போது கவனத்துடன் கேட்கின்றனர். கவனமாகப் பாடல் கேட்கும்போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும்போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, டிவி பார்த்துகொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதனால் கவனம் சிதறடிக்கப்பட்டு படிப்பது முழுமையாகப் மனத்தில் பதிவதில்லை. அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்பதில்லை.
மறதியைப் போக்க
கவனமாகப் படியுங்கள். படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள். டிவி பார்க்காதீர்கள். இரவுப் படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள். அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதிப் பாருங்கள். ஆர்வமாகப் படித்தால் எதுவும் மறக்காது
நாம் நமக்காகப் படிக்கிறோம்
நாம் ஏன், எதற்குப் படிக்கிறோம் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்காகவோ படித்தால், நிச்சயம் மறக்கத்தான் செய்யும். நீங்கள் உங்களுக்காகப் படிக்கிறீர்கள். நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாகப்போகும். இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே, நான் படிப்பது என்னுடைய நலனுக்காகத்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும்.
சினிமா பாட்டு கேட்கும்போது உள்ள கவனம், படிப்பதில் குறைவாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம், படிப்பில் இல்லாமல் போகிறது. நம்முடைய நேரத்தை, நம்மை வளர்த்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதாலும், கிரிக்கெட் பார்ப்பதாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர். மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவழியுங்கள் (படியுங்கள்).
கடின உழைப்பு
1. படிப்பதற்காக அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். நமது படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளிக்கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை... எனவே நான் நன்றாகப் படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களைக் குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்கக் கூடாது, நாம் எந்தப் பள்ளியில் படித்தாலும் கவனமாக கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும்.
2. எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்துக்குச் செல்ல வேண்டும்.
3. படிப்பதை தள்ளிப்போடாதீர்கள். படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளிப் போடாதீர்கள். இப்படி தள்ளிப் போட்டுக்கொண்டே போனால், தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும். நம் வாழ்க்கையும் வீணாகிவிடும்.
4. குறிப்பிட்ட பாடத்துக்கு அதிகக் கவனம் செலுத்திப் படிப்பது தேவையான ஒன்று. ப்ளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேருவதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதேபோல், மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே, குறிபிட்ட பாடங்களில் அதிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.
தேர்வு எழுதும் முன்...
தேர்வுக்கு முன்னதாக நாம் பாடங்களைப் படிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளைப் பார்ப்போம்:
1. படிக்கும் முறை
பொதுவாக நாம் தேர்வுக்காகப் படிக்கும்போது வெறுமனே புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்குப் போகாமல், அதுவரை படித்ததைப் பார்க்காமல் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. திட்டமிடுதல்
எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்குப் படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். (Time table போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்புக்காகச் செலவு செய்ய வேண்டும். இதில் 10 மணி நேரத்தை படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தை படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்தவும் (Revise செய்ய) பயன்படுத்த வேண்டும். அதேபோல், நாம் படிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த பயன்படுத்த வேண்டும்.
3. சுய பரிசோதனை (Check list)
ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்கப்போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதை தினமும் செய்தால்தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்கவேண்டி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். திட்டமிடும்போது வாரத்தில் 6 நாள்களுக்குத்தான் நாம் படிப்பதற்குத் திட்டமிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிக்க ஒதுக்க வேண்டும். தேர்வுக்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும்போதே படிப்பதை நிறுத்திக்கொள்ள வேன்டும். புதிதாக எதையும் படிக்காமல் அதுவரை படித்ததை நினைவில் நிறுத்த வேண்டும். எனவே, நாம் திட்டமிடும்போது தேர்வுக்கு 2 அல்லது 3 வாரத்துக்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்துவிடும்படியாகத் திட்டமிட வேண்டும்.
4. நம்பிகையுடன் படிக்க வேண்டும்
படிக்கும்போது, இந்தப் பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். பாடம் கடினமாக உள்ளதே, எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக்கூடாது. Negative thoughts இருக்கக்கூடாது. படிக்கும்போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் நாம் பாடத்தை Revise பண்ணுவதற்கு எளிதாக இருக்கும். படிக்கும்போது பாட்டு கேட்பது, டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்திப் படிக்க வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாளே பேனா, பென்சில், ரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதச் செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்ல வேண்டும்.
தேர்வு எழுதும் போது...
தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றவுடன் நேராக தேர்வறைக்குச் சென்றுவிடவும். நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது நம்மை பலவீனப்படுத்தக்கூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும். நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால், தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டை விட்டுவிடுவோம். எனவே நமது நம்பிக்கையைப் பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
1. தேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாகப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் மேஜையின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்துவிடுங்கள். அழிக்க முடியவில்லை எனில் தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
2. கேள்வித்தாள் வந்ததும் கவனமாகப் படிக்கவும். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து கேள்விதாளைப் படிக்கவும். நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்வித்தாளை கவனமாகப் படிக்கவும்.
3. நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள். பிறகு ஓரளவுக்குத் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள். தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம். எந்தக் கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.
4. பக்கம் பக்கமாகப் பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Point by Points). முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள்.\
5. சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்துக்குள் எழுதுங்கள். தேவைப்படும்போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
6. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதிப் பழகிய பேனாவை பயன்படுத்துங்கள்.
7. பொதுவாக, முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தைப் பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
8. ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம்.
9. விடைத்தாளை அதிகாரியிடம் சரப்பிக்கும் முன், கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
10. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால், விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்த பிறகு...
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டுக்குச் செல்லவும். நண்பர்களுடன் வினா விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டி, நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள். அது நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும் அத்துடன், அடுத்த தேர்வுக்கு நாம் ஆயத்தமாவதை பாதிக்கும்.
பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளைத் தங்களுடைய பிள்ளைகள் பின்பற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், மாணவர்கள் வயது குறைந்தவர்கள். பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே, மேற்சொன்ன வழிமுறைகளைப் பெற்றோர்கள் படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் சரியாகப் படிக்கிறார்களா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதிக் காண்பிக்கச் சொல்ல வேண்டும். படிப்பை தவிர மற்ற விஷயங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
1. டிவி பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள். கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
2. பிள்ளைகளிடம் இருந்து செல்போனை, தேர்வு முடியும் வரை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். படிப்பதற்குத் தவிர, வேறு எதற்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த விட வேண்டாம். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமயாகத் தடை போடுங்கள்.
4. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும். பிள்ளைகளைத் திட்டாதீர்கள். அன்பாகச் சொல்லி, அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டவும்.
5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதைக் கண்கானியுங்கள். அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாகச் சொல்லுங்கள். திட்டமிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.
6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
7. உடன் படிக்கும் மாணவ, மாணவியருடனோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பிற மாணவர்களுடனோ உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
8. உங்கள் வீட்டு பொருளாதாரச் சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுக் கவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.