Thursday, February 19, 2015

பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், 'லீக்' ஆகாமல் பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச், 5ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 வினாத்தாள்கள் சென்னையிலிருந்து, நேற்று பிற்பகலில் மாவட்டங்களுக்கு தனித்தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
பல கட்டுப்பாடுகள்:
வாகனங்களை வழி யில், தேவையின்றி நிறுத்தக்கூடாது; மொபைல் போனில் யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது என, வினாத்தாள் கொண்டு செல்வோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுகள் மூடி முத்திரையிட்ட உறைகளில், மூன்றடுக்கு பாதுகாப்பு பண்டல்களுடன், மாவட்ட ரகசிய காப்பு அறைகளில் இன்று வைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், 130 இடங்களில் வினாத்தாள் ரகசிய காப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல், மார்ச், 5ம் தேதி அதிகாலை வரையில் வினாத் தாள்கள் பாதுகாக்கப்படுகிறது.
கட்டுகள் பிரிக்கப்பட்டு...:
மார்ச், 5ம் தேதி காலையில் தேர்வுத்துறை அதிகாரிகள் முன்னி லை யில், வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும். கடந்த காலங்களில், வினாத்தாள்கள் சில இடங்களில் 'லீக்' ஆனதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இம்முறை போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் வினாத்தாள் கட்டுகள், ரகசிய காப்பு அறையில் பாதுகாக்கப்பட உள்ளது.
இயக்குனர் கடிதம்:
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கடிதம் அனுப்பியுள்ளார். வினாத்தாள் கட்டுக்களை, ரகசிய காப்பு அறைகளில் போலீசார் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு அறையை உரிய உத்தரவு இன்றியோ, தேர்வுத்துறை அனுமதித்த அதிகாரிகள் இல்லாமலோ திறக்கக்கூடாது. மேலும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு அறை முன் நிறுவப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு:
வினாத்தாள் பாதுகாப்பு பணிகளை பார்வையிட தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தலைமையில், பள்ளி கல்வித்துறையின் இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி, பூஜா குல்கர்னி. இளங்கோவன், பிச்சை, ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கல்வி செயலர் சபீதாவும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆய்வு செய்து வருகிறார்.
பிளஸ்–2 தேர்வு: மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1000 பறக்கும் படை-தேர்வுத்துறை நடவடிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 5–ந் தேதி தொடங்கி 31–ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் எழுத உள்ளனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேருக்கு 2377 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 16,947 மாணவ–மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். சிறைக் கைதிகள் 77 பேர் புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வில் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 4 ஆயிரம் ஆசிரியர்களை கொண்ட 1000 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய தொழில் நுட்ப பாடத்தேர்வின் போது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட தனிப்படை தேர்வு மையங்களில் ஆய்வு நடத்த உள்ளது.
மார்ச் 19–ல் தொடங்கும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 11,827 பள்ளிகளை சேர்ந்த 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர். இதில் தமிழ் வழி மாணவர்கள் 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர்.
இந்த தேர்வுக்கு 3298 தேர்வு மையங்களில் 75 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை கண்காணிக்க 5200 பேர் கொண்ட 1300 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 412 பள்ளிகளை சேர்ந்த 24,653 மாணவர்கள், 28,750 மாணவிகள் 144 மையங்களில் எழுதுகின்றனர்.
இதே போல 10–ம் வகுப்பை தேர்வை 578 பள்ளிகளை சேர்ந்த 28,124 மாணவர்கள் 29,230 மாணவிகள் 209 மையங்களில் எழுத உள்ளனர்.
அரசு பொதுத் தேர்வில் எவ்வித முறைகேட்டிற்கும், புகாருக்கும் இடம் கொடுக்காத வகையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
"தியரி கேள்விகளை அதிகாலை, மாலையில் படிப்பது நல்லது; கணக்கை இரவில் செய்து பார்க்கலாம்".
பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.
"தேர்வுகளை எவ்வாறு திட்டமிட்டு எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்" என மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் துரைபாஸ்கரன் தரும் டிப்ஸ்கள் இங்கே...
முதலில் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். உடல், மன நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தேர்வு காலம் முடியும் வரை மனதை லேசாக வைத்திருக்க பழக வேண்டும்.
எந்த பாடத்தை படித்தாலும், அதற்குமுன் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்திய பின் படிக்கலாம். தூக்கம் பாதிக்கும் வகையில் அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது. தேர்வு முடியும் வரை வீண் விவாதங்கள், அரட்டைகளை தவிர்க்க வேண்டும். வீடுகளில் டிவி கேபிள் இணைப்பை தேர்வு வரை கட் செய்வது சிறந்தது.
நேரத்தை கபளீகரம் செய்யும் மொபைல் போன், கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. டூவீலர் ஓட்டும் ஆசையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தியரி கேள்விகளை அதிகாலை, மாலையில் படிப்பது நல்லது. கணக்கு பாடத்தை இரவில் செய்து பார்க்கலாம். அறிவியலில் படம் வரையும் கேள்விகளுக்குரிய படங்களை அடிக்கடி வரைந்து பார்த்தால் முழுமதிப்பெண் பெற வழியுள்ளது.
கடின பகுதிகளை அடிக்கடி எழுதி பார்ப்பது, குறிப்புகள் எடுத்து படிக்கும் பழக்கத்தால் பாடங்கள் மனதில் நிற்கும். பாடங்களை படிக்கும்போது தூய்மையான காற்றோட்டம் உள்ள இடங்களில் அமர்ந்து படித்தால் சோர்வு ஏற்படாது. விரைவில் செரிமானமாகும் அளவான சாப்பாடு மாணவர்களுக்கு அவசியம்.
பசி உணர்வுடன் படிப்பதை தவிர்க்க வேண்டும். பாடத்தின் முக்கிய பகுதிகளை நண்பர்களுடன் அடிக்கடி விவாதிக்கலாம். விரும்பிப் படிக்கும் எந்த பாடங்களும் கடினமில்லை. விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்கலாம்.
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
செய்யக்கூடியவை என்ன?
* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும்.
* விடைத்தாளின் இரு புறத்திலும் எழுத வேண்டும்.
* முறைகள் எல்லாம் விடைத்தாளின் பகுதியில் இடம்பெற வேண்டும்.
* கேள்வியின் எண் தவறாமல் எழுத வேண்டும்.
* இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
* வினாத்தாளின் வரிசை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
* விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை பேனாக் களால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும்.
* விடைத்தாளில் எதுவும் எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட வேண்டும்.
செய்யக் கூடாதவை என்னென்ன?
* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது.
* கலர் பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது.
* விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
அதன் விவரம்: விடைத்தாள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இருபுறத்திலும் எழுத வேண்டும்.
விடைகள் தொடர்பான அனைத்துக் கணக்கீடுகளும் விடைத்தாள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற வேண்டும். வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும். விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளைத் தெளிவாக எழுத வேண்டும். விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இட வேண்டும்.
மாணவர்கள் செய்யக் கூடாதவை: வினாத்தாளில் எந்தவிதக் குறியீடும் இடக்கூடாது. விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயரை எழுதக் கூடாது. "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களைப் பயன்படுத்தி எழுதக் கூடாது. விடைத்தாள் புத்தகத்தின் எந்தத் தாளையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது ஆகிய அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை
தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கம் இணைப்புப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 தேர்வை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வரும், 22ம் தேதி, மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் முடிகின்றன. விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை, தேர்வு மையங்களுக்கு அனுப்பும் ஏற்பாடு நடந்து வருகிறது.
இதுகுறித்து, துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மற்றும் தேர்வுத் துறை இயக்குனர், நேற்று, தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். துறைச் செயலர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் சபீதா ஆலோசனை நடத்தினார். இதேபோல், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், தேர்வுத் துறை இணை இயக்குனர்கள், பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், டி.பி.ஐ., வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
செய்முறைத் தேர்வுகள் முடிந்ததும், அதன் விடைத்தாள்களை ஆய்வு செய்வது; ரெக்கார்டு நோட்டுகளை சோதித்தல்; தேர்வு மையங்களை அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது; வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பத்திரமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி, அதை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர். பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் பட்டியல், தேர்வு மையங்கள், எத்தனை தேர்வு அறைகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள், தேர்வுத் துறையால் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு
மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள, பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்ட, 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 5 முதல், 31 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், 6,256 பள்ளிகளைச் சேர்ந்த, 3,90,753 மாணவர்கள், 4,52,311 மாணவியர் என, மொத்தம் 8,43,064 பேர் பங்கேற்கின்றனர். இதில், தமிழ் வழியில் தேர்வு எழுதும், 5,56,498 பேருக்கு, 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட, 16,947 மாணவ, மாணவியர் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். சிறைக்கைதிகள், 77 பேர், புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதுகின்றனர். காப்பியடித்தல், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடாமல் கண்காணிக்க, 4,000 ஆசிரியர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட, 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முக்கிய தொழில்நுட்ப பாடத் தேர்வின் போது, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொண்ட தனிப்படை, தேர்வு மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த உள்ளது.
10ம் வகுப்பு தேர்வு:
மார்ச் 19ல் துவங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம், புதுச்சேரியிலுள்ள, 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்கள், 5,32,186 மாணவியர் என, 10,72,691 பேர் எழுதுகின்றனர். இதில், தமிழ் வழி மாணவர்கள், 7,30,590 பேர். இத்தேர்வுக்கு, 3,298 தேர்வு மையங்களில், 75 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்களைக் கண்காணிக்க, 5,200 பேர் கொண்ட, 1,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
புழல் சிறையில்...:
பாளையங்கோட்டை மத்திய சிறையில், 33; கோவை மத்திய சிறை, 97; சென்னை, புழல்சிறை யில், 111 பேர் தேர்வெழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு, தரைத்தளத்திலேயே தேர்வு அறைகள் அமைக்கப்படும். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங் களில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., தலைமையிலான குழுவினர், பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வை செய்கின்றனர்.
புதுச்சேரியில்...:
புதுச்சேரியில், 128 பள்ளி களைச் சேர்ந்த, 6,575 மாணவர்கள், 7,731 மாணவியர், 33 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வையும், 291 பள்ளிகளைச் சேர்ந்த, 9,703 மாணவர்கள், 9,856 மாணவியர், 48 தேர்வு மையங்களில், 10ம் வகுப்பு தேர்வையும் எழுதுகின்றனர்.
சென்னையில்...:
சென்னையில், 412 பள்ளிகளைச் சேர்ந்த, 24,653 மாணவர்கள், 28,750 மாணவியர், 144 தேர்வு மையங்களில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதேபோல், 578 பள்ளி களைச் சேர்ந்த, 28,124 மாணவர்கள், 29,230 மாணவி யர், 209 தேர்வு மையங்களில், 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 விடைத்தாளில் ஸ்கெட்ச் பேனாக்களால் அடிக்கோடிடக் கூடாது: கல்வித்துறை உத்தரவு
விருதுநகர்:10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வழங்கப்படும் விடைத்தாள்களில் கலர் ஸ்கெட்ச் பேனாவால் அடிக்கோடிடக் கூடாது என கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுசம்பந்தமாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2தேர்வு காலை 10மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கும் துவங்குகிறது. மாணவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் வரவேண்டும். தேர்வறைக்குள் 20 நிமிடத்துக்கு முன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் 30 பக்கங்களை கொண்ட கோடிட்ட விடைத்தாள்களாக இருக்கும். ஒரு பக்கத்திற்கு 22 கோடுகள் இருக்கும். உயிரியல் பாடத்தில் தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் இரண்டு மெயின் சீட்டுகளுடன் தலா 22 பக்கங்களை கொண்டதாக இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு 30 பக்கங்களும், அக்கவுன்டன்சி பாட விடைத்தாள்கள் 46 பக்கங்களை கொண்டதாக இருக்கும். இதில் முதல் 14 பக்கங்கள் கோடு இல்லாமலும், 15 முதல் 46ம் பக்கம் வரை கோடிட்டும் இருக்கும். மற்ற அனைத்து பாட விடைத்தாள்களும் 38 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள்கள் 22 பக்கங்களை கொண்ட கோடிட்ட விடைத்தாள்களாக இருக்கும். ஒரு பக்கத்திற்கு 22 கோடுகள் இருக்கும். ஆங்கிலம் 2வது தாளுக்கான விடைத்தாளில் முதல் இரண்டு பக்கங்கள் கோடில்லாமல் இருக்கும்.
இதில், விளம்பரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும். தமிழ் 2ம் தாளுக்கு விடைத்தாளில் முன்பதிவு விண்ணப்பம் அச்சிடப்பட்டு இருக்கும். சமூக அறிவியல் விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் வரைபடங்கள் இருக்கும்.கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட விடைத்தாள்கள் 30 பக்கங்களை கொண்டதாக இருக்கும். விடைத்தாள்களில் ‘ரப் ஒர்க்‘ வலது ஓரத்தில் செய்யாமல், கீழ் பகுதியில் செய்து பார்க்கவேண்டும். மேலும், கலர் ஸ்கெட்ச் பேனாக்களில் அடிக்கோடு இடுவதை தவிர்க்க வேண்டும். மை பேனாக்களை பயன்படுத்தவேண்டும். கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.அவற்றை வெள்ளை நூல்கொண்டுகட்டி கொடுக்கவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947 பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும் கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. விடைத்தாள் தைக்கும் பணி மற்றும் வினாத் தாள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகளும் நடந்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் வழியில்..
தமிழ் வழியில் பிளஸ் 2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர் தமிழ் வழியில் எழுதுகின்றனர்
சிறையில்..
இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை 77 சிறைவாசிகள் புழல் சிறையில் தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 130 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 தேர்வு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 42 ஆயிரத்து 963 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், மாணவர்களை விட 61 ஆயிரத்து 558 மாணவிகள் அதிகளவில் தேர்வெழுதுகின்றனர்.
10ம் வகுப்பு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது. இதற்காக 11 ஆயிரத்து 827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 பேரும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவியர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 33,816 மாணவ, மாணவிகளும் தேர்வெழுதுகின்றனர்.
வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதிலும், 12ம் தேர்விற்கு 4,000க்கும் மேற்பட்டவர்களும். 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 5,200க்கும் மேற்பட்டவர்களும் பறக்கும்படை உறுப்பினர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை
சென்னை தேர்வு மையங்கள்
சென்னையை பொறுத்தவரை 412 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 653 மாணவர்கள், 28 ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 53 ஆயிரத்து 403 மாணவ, மாணவியர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பை பொறுத்தவரை சென்னையில் 578 பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரத்து 124 மாணவர்கள், 29 ஆயிரத்து 230 மாணவிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டை தடுக்க 9200 பறக்கும்படை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர்: தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947 பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும் கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. விடைத்தாள் தைக்கும் பணி மற்றும் வினாத் தாள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகளும் நடந்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 6,256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 42 ஆயிரத்து 963 பேரும் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், மாணவர்களை விட 61 ஆயிரத்து 558 மாணவிகள் அதிகளவில் தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது. இதற்காக 11 ஆயிரத்து 827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 பேரும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவியர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 33,816 மாணவ, மாணவிகளும் தேர்வெழுதுகின்றனர். வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதிலும், 12ம் தேர்விற்கு 4,000க்கும் மேற்பட்டவர்களும். 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 5,200க்கும் மேற்பட்டவர்களும் பறக்கும்படை உறுப்பினர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழ் வழியில்..
தமிழ் வழியில் பிளஸ் 2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 30 ஆயிரத்து 590 பேர் தமிழ் வழியில் எழுதுகின்றனர்.
சிறையில்..
இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை 77 சிறைவாசிகள் புழல் சிறையில் தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 130 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.
சென்னை தேர்வு மையங்கள்
சென்னையை பொறுத்தவரை 412 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 653 மாணவர்கள், 28 ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 53 ஆயிரத்து 403 மாணவ, மாணவியர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பை பொறுத்தவரை சென்னையில் 578 பள்ளிகளை சேர்ந்த 28 ஆயிரத்து 124 மாணவர்கள், 29 ஆயிரத்து 230 மாணவிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்
நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கு 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வில் 6,256 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 11,827 பள்ளிகளைச் சேர்ந்த 10,72,691 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வை 16,947 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 33,816 மாணவர்களும் நிகழாண்டு கூடுதலாக எழுதுகின்றனர்.
60,000 மாணவிகள் அதிகம்: நிகழாண்டு பிளஸ் 2 தேர்வை 3,90,753 மாணவர்களும், 4,52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 5,40,505 மாணவர்களும், 5,32,186 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். 10-ஆம் வகுப்பில் தனித்தேர்வர்களாக 50,429 பேரும், பிளஸ் 2 தேர்வில் 42,963 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக 2,377 தேர்வு மையங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்காக 3,298 தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
77 சிறைவாசிகள்: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 241 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.
தமிழ் வழியில்... பிளஸ் 2 தேர்வை 5,50,000 பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 7,30,000 பேரும் தமிழ் வழியில் எழுதுகின்றனர்.
கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தனி அறைகளை ஒதுக்கீடு செய்வும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்புப் பணிகளுக்காக மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்தும், முக்கியப் பாடங்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் சிறப்புப் பார்வையாளர்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில்... சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 53 ஆயிரம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 209 தேர்வு மையங்களில் 57 ஆயிரம் மாணவர்களும் எழுத உள்ளனர்.
புதுச்சேரியில்... புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
10-ஆம் வகுப்புத் தேர்வை 48 தேர்வு மையங்களில் 19 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.