Thursday, November 2, 2017

முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Saturday, October 7, 2017

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Friday, September 1, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்

பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வும் மாற்றப்பட உள்ளது.
அதனால், பழைய முறையில், தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்கு பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது.
எனவே, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, பிளஸ் 2 தேர்வு எழுதலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 26, 2017

பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.

பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்...

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Thursday, August 24, 2017

பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை

'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Sunday, July 30, 2017

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும்

 ”பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,” என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Saturday, July 8, 2017

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 10-ம் தேதி முதல் விநியோகம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஜூலை 10-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.

Friday, July 7, 2017

பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்

 ’பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 21, 2017

பிளஸ் 2 மறு மதிப்பீடு ’ரிசல்ட்’ வெளியீடு

 பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்பதாக கருதிய மாணவர்களிடம், மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

Monday, June 5, 2017

பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று கடைசி வாய்ப்பு

பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, இன்று(ஜூன் 6) கடைசி நாள்.

60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்

தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை இழந்து, மாணவன் தவிக்கிறான்.

Saturday, June 3, 2017

பிளஸ்2தேர்வு முடிவுகள்; முதலிடம் பிடித்த மாணவர் கைது

பீஹாரில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அவரது தேர்வு செய்யப்பட்டது. மாணவர் கைது செய்யப்பட்டார்.

பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 

Thursday, May 25, 2017

பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்கு இல்லை!

’வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்’ என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

’நீட்’ தேர்வு முடிவு வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு

’நீட்’ தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

’கிரேஸ் மார்க்’ பிரச்னையால் சி.பி.எஸ்.இ., ’ரிசல்ட்’ நிறுத்தம்

’கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது’ என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ’ஆன்லைன்’ மாதிரி தேர்வு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ’ஆன்லைனில்’ மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Monday, May 22, 2017

மேல் நிலை கல்வி தேர்வு முறை மாற்றம்

- ஆந்திரா போன்ற தேர்வு முறை
- வகுப்பு 11 & 12 ஒருங்கிணைந்த மதிப்பெண்
Flash News : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு...
# பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு...
# தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...
# 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் சராசரி கணக்கிட்டுவழங்கப்படும்.
- அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் - தந்தி செய்திகள்.

Wednesday, May 17, 2017

11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

11ஆம் வகுப்புக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு - தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு
வருவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

+2 மார்ச் 2017 பொதுத்தோ்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாள் நகல்

+2 மார்ச் 2017 பொதுத்தோ்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை மாலை (18.05.2017) வரை விண்ணப்பிக்கலாம் என்று கூடுதல் கால அவகாசம் அளித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியீடு

Monday, May 15, 2017

மாணவர் மாற்று சான்றிதழ் ’டிஜிட்டல்’ மயமாகிறது

பிளஸ் 2 தேர்வில், ’ரேங்கிங்’ முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, ’டிஜிட்டல்’ ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு இன்று ’ரிசல்ட்?’

ஐ.சி.எஸ்.இ., என்ற இந்திய இடைநிலை சான்றிதழ் படிப்பில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 ’ரிசல்ட்’ எப்போது?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் நடந்த, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

Wednesday, May 10, 2017

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் உதவுமா

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் உதவுமா : மருத்துவம் விரும்பும் மாணவர்கள் தவிப்பு
```தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.

Monday, April 24, 2017

பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்

'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Tuesday, April 18, 2017

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இன்ஜி., சேர்க்கை: அமைச்சர் கடிதம்

 ’தமிழகத்தில், பொறியியல் கல்லூரிகளில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை தொடர அனுமதிக்க வேண்டும்’ என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகருக்கு, கடிதம் எழுதி உள்ளார்.

Thursday, April 6, 2017

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகமெங்கும் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மேற்படிப்பு குறித்த வழிகாட்டுதல் ஆலோசனை கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து,

Saturday, April 1, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கு வில்லனான விலங்கியல்

பிளஸ் 2 தேர்வில், இறுதி நாளான நேற்று, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தாவரவியல் தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. 

Tuesday, March 28, 2017

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்

நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, நாளை மறுநாள் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.

கடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்

பிளஸ் 2 கணிதத் தேர்வில், கட்டாய வினா மிகவும் சிக்கலானதாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால், இருநுாறுக்கு இருநுாறு சென்டம் சரியும் என, தெரிய வந்துள்ளது.

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்!

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், ’சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

Thursday, March 23, 2017

இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும்; மாணவர்கள் உறுதி!

 இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். 

இயற்பியல், பொருளியல் தேர்வுகள் எப்படி இருந்தன?

பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ல் துவங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இயற்பியல், பொருளியல் தேர்வு எழுதிய, பிளஸ் 2 மாணவ, மாணவியரிடம், தேர்வு எப்படி இருந்தது என, கேட்டோம். 

பொது தேர்வை கலங்கடிக்கும் ’மொட்டை’ கடிதங்கள்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு ’மொட்டை’ கடிதங்கள் குவிந்து வருகின்றன.

Thursday, March 16, 2017

கணக்கு பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண் வினாவில் குழப்பம்!

பிளஸ் 2 கணக்குபதிவியல் தேர்வில், நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண் வினா ஒன்றுக்கு இருவேறு விடைகள் கிடைப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்துறை உத்தரவு

’பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்’ என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு

’டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பாணியில் கேள்வி: "சென்டம்" சரியுமா?

கடினமான கேள்வி மற்றும் தவறான கேள்வியால் கணித தேர்வில், சதம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் என கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Saturday, March 11, 2017

பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை

பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன

அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ?

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது.

வணிகவியல் தேர்வு வினாத்தாளில் பிழை

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல் பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 

Monday, March 6, 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

மொழிப்பாட தேர்வுகள் ’ஈஸி’: மாணவர்கள் உற்சாகம்!

கோவையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த, மொழிப் பாடங்களுக்கான இரண்டாம் தாள் தேர்வில், 380 பேர் ஆப்சென்ட் ஆனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் ஆப்சென்ட்; தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தில்லுமுல்லு?

பிளஸ் 2 தேர்வுகளில், பள்ளி மாணவர்கள் கணிசமான அளவு ஆப்சென்ட் ஆவதால், தேர்ச்சி விகிதத்துக்காக, தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை தேர்வு எழுத தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Friday, March 3, 2017

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

பிளஸ் 2 தமிழ் முதல் தாள்; 347 பேர் ’ஆப்சென்ட்’

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு 94 மையங்களில் நேற்று நடந்தது.

தமிழக சிறைகளில் 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

தமிழக சிறை கைதிகளும், சென்னை மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

Wednesday, March 1, 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வு; மின் ஊழியர்கள் ’அலர்ட்’

பிளஸ் 2 பொதுத் தேர்வு  துவங்க உள்ளதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்குமாறு, ஊழியர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 

மேல்நிலை பொதுத் தேர்வு; மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்  துவங்க உள்ள நிலையில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Monday, February 27, 2017

பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர், பெல்ட், வாட்ச் அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை

பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ’முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்’ என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

Wednesday, February 22, 2017

பிளஸ் 2 தேர்வு ஆயத்த பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வினை மொத்தம், 7,266 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஆயத்தப்பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உத்தரவு

: “பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்க வேண்டும்,” என, கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் : தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும்.

Saturday, February 18, 2017

Friday, February 17, 2017

‘பிரின்டிங்’ செய்த பிளஸ் 2 மாணவர்கள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், பிரின்டிங் மற்றும் டையிங் குறித்து, மாணவர்கள் செயல்முறை விளக்கம் செய்தனர்.

Wednesday, February 15, 2017

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

பீஹாரில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது

பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Monday, January 30, 2017

பிளஸ் 2 செய்முறை தேர்வில் முறைகேடுக்கு இடம் கூடாது

'பிளஸ் 2 செய்முறை தேர்வில், முறைகேடுக்கு இடமின்றி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குனர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 31ல் முடிகிறது.

உடல்திறன் சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிப்பு

அரசு பொதுத்தேர்வு எழுத, ஒரு மணி நேர சலுகை பெறும் மாணவர்கள், உடல்திறன் சான்றிதழ் பெற, கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றனர்

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு

அரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன

Thursday, January 26, 2017

பிளஸ் 2 செய்முறை தேர்வு; பிப்ரவரி 2ல் துவக்கம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்’ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Saturday, January 21, 2017

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

பொதுத் தேர்வுக்கு தயாராகும்மாணவர்களுக்குஅச்சத்தை நீக்கிதன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளஅரசுப்பள்ளிகளில் உளவியல் ஆலோசனைவழங்கஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Thursday, January 12, 2017

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

தேசிய தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு.

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.